கம்பராமாயணம் 7464 · யுத்த 15.151
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புன் மக்கள் தருமம் பூணாப் - நீ புல்லிய தன்மையுடைய அரக்கர்களின் தருமத்தை மேற்கொள்ளாமல்; புலமக்கள் தருமம் பூண்டால் - அறிவுடை மக்களது தருமத்தைக் கைக்கொண்டால், உன் மக்கள் ஆகி உள்ளார் - உன் மக்களாய் இருப்பவர்களும்; உன்னொடும் ஒருங்கு தோன்றும் என் மக்கள் ஆகி உள்ளார் - உன்னோடு உடன் பிறந்த எனக்கு மக்களாய் இருப்பவர்களும்; இக்குடிக்கு இறுதி சூழ்ந்தான் - இந்த அரக்கர் குலத்துக்கு அழிவைத் தேடியவனான இராவணன்; தன் மக்கள் ஆகி உள்ளார் - தனக்கு மக்களாய் இருப்பவர்களும்; தலையொடும் திரிவர் அன்றே - இராமபாணத்தால் தலையை இழக்காது திரிவர் அன்றோ.
அரக்கராய் உள்ளோர் எல்லாம் இறந்து பாழ்படுவோம் பட்டால் கையினால் எள்நீர் நல்கிக் கடன் கழிப்பார் யார் எனக் கேட்ட கும்பகருணனுக்கு நீ இராமனைச் சேர்ந்தால் அரக்கர் குலம் அழியாமல் காக்கலாம் என்று கூறியவாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Those who are your sons, those who are my sons,
- I who was born of one womb with you, and those who are the sons
- of him who has plotted the end of this clan, will go about with their heads on, will they not,
- if you put on the dharma of the wise and not the dharma of base men?”
What the poem says
Vīṭaṇaṉ answers Kumpakaruṇaṉ's earlier question about who will perform the funeral rites for the dead demons. If Kumpakaruṇaṉ gives up the base ways of the demons and follows the dharma of the wise, the whole family can be saved. His sons, Vīṭaṇaṉ's sons and even the sons of Irāvaṇaṉ, who has brought ruin on the clan, would keep their heads instead of losing them to Irāmaṉ's arrows.