கம்பராமாயணம் 7467 · யுத்த 15.154
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தும்பி அம் தொடையல் மாலைச் சுடர்முடி - வண்டுகள் மொய்க்கிற அழகிய தொடுத்தல் அமைந்த மலர் மாலையைச் சூடிய ஒளி பொருந்திய முடி; படியில் தோய - நிலத்தில் படிய விழுந்து வணங்கிப்; பம்பு பொற்கழல்கள் - பரவியுள்ள பொன்னால் ஆகிய வீரக்கழல்கள் அணிந்த கால்களை; கையால் பற்றினன் புலம்பும் - கையால் பற்றிப் புலம்புகிற; பொன் தோள் தம்பியை - அழகிய தோள்களையுடைய தம்பியாகிய வீடணனை, எடுத்து மார்பில் தழுவி - எடுத்து மார்பில் தழுவிக் கொண்டு; தன் தறுகணூடு - தன் வீரம் வெளிப்படும் கண்களின் வழியாக; வெம்புணீர் சொரிய நின்றான் - வெப்பத்துடன் கூடிய குருதி வெளிப்பட நின்றவனாகிய கும்பகருணன்; இனையன விளம்பலுற்றான் - இத்தகைய சொற்களைச் சொல்லல் ஆனான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His younger brother, his bright crown with its bee-haunted garland touching the ground,
- clasped in his hands the golden anklets and wept; that brother of the golden shoulders
- he lifted and hugged to his chest, and stood with hot blood
- streaming from his fierce eyes, and began to say these words.
What the poem says
Vīṭaṇaṉ lies with his crowned head on the ground, gripping his brother's anklets and weeping. Kumpakaruṇaṉ lifts him up and holds him to his chest. Tears of hot blood pour from his fierce eyes, a sign of his anguish. Then he begins his reply.