கம்பராமாயணம் 7468 · யுத்த 15.155
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தார்க்கோல மேனி மைந்த - மார்பில் மாலையணிந்த அழகிய உடம்பினை உடைய மைந்தனே; நெடிது நாள் வளர்த்து - என்னை நீண்ட நாள் அருமையாக வளர்த்துப்; பின்னை - இன்று; போர்க்கோலம் செய்து விட்டாற்கு - தன் கையாலேயே போர்க்கோலம் பூணுவித்துப் போர்க்குச் சென்று வா என விட்ட இராவணனுக்காக; உயிர் கொடாது - போரில் என்னுயிரைக் கொடுக்காமல்; நீர்க்கோல வாழ்வை நச்சி - நீரில் எழுதிய கோலத்தைப் போல் விரைந்து அழியும் செல்வ வாழ்க்கையை விரும்பி; அங்குப் போகேன் - அந்த இராமனிடம் போய்ச் சேரமாட்டேன்; என் துயர் தவிர்த்தி ஆகின் - என் துன்பத்தைப் போக்க விரும்பினால்; கார்க்கோல மேனியானை - காளமேகம் போல் கரிய அழகிய திருமேனியுடைய இராமனை; கடிதின் ஏகி கூடுதி - விரைவில் சென்றடைவாய்.
'நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்து' என்பதனை ஆற்றொழுக்காக உள்ளவாறே கொண்டு இராவணன் செயலாகவே ஆக்குதல் ஓர் உரையாகும். போர்க்கோலம் செய்துவிட்டமையை முன்னர்க் காண்க. செய்நன்றி அறிதலிற் சிறந்தவன் கும்பகர்ணன் என்பது இதனால் புலப்படும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Craving a life like a pattern drawn on water, I will not go there
- without giving my life for him who reared me through long days and then
- dressed me for war and sent me out. O youth whose body is lovely with garlands,
- if you would end my grief, go quickly and join Him whose body is lovely as a dark cloud.”
What the poem says
Kumpakaruṇaṉ refuses. Irāvaṇaṉ raised him and cared for him for many years, and has now armed him with his own hands and sent him to war. He will not abandon that brother for a life as fleeting as a pattern drawn on water.
If Vīṭaṇaṉ wants to ease his grief, he should go straight back to Irāmaṉ, dark and beautiful as a rain cloud. Gratitude for kindness received is Kumpakaruṇaṉ's defining virtue.