கம்பராமாயணம் 7470 · யுத்த 15.157
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கருத்து இலா இறைவன் - மந்திரம் கேட்கும் சூழ்தல் இல்லாத தலைவன்; தீமை கருதினால் - தீத்தொழில் செய்ய எண்ணினால்; அதனைக் காத்துத் - அவன் அவ்வாறு செய்யாமல் தடுத்து; திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம் - திருத்துதல் கூடுமாயின் அன்றோ திருத்தலாம்; தீராது ஆயின் - அவ்வாறு திருத்த முடியாது போனால்; பொருத்துறு பொருள் உண்டாமோ- அவனுக்கு எதிர் சென்று நின்று அடையத் தக்க பெரும் பொருள் உண்டோ? உண்டவர்க்கு உரியது - ஒருவனுடைய உணவை உண்டு வளர்ந்தவர் செய்ய உரிய செயல்; பொருதொழிற்கு உரியர் ஆகி - அவனுக்காகப் போர் செய்யும் தொழிலுக்கு உரிமையுடையவர் ஆகி; ஒருத்தரின் முன்னம் சாதல் - ஒப்பற்ற தலைவனுக்கு முன்னர்ச் சாதலே; அம்மா - கேட்பாயாக.
தலைவன் தவறு செய்தால் திருத்த முயலலாம் அவ்வாறு திருத்த முடியாதபோது செய்யத்தக்கது அவனுடைய மாற்றாரைச் சேர்தல் அன்று. அவனது மாற்றாருடன் பொருது இறத்தலே தக்கது என்றவாறு. தலைவனுக்காகச் சாதலே செய்யத்தக்கது என்று கும்பகருணன் கூறுவது அறத்தை விடப் பாசமும் தலைவன் என்ற பற்றும் தான் முக்கியமானவை என அவன் கருதுவதால் என்க.
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோட் டக்க துடைத்து.
என்ற திருக்குறளை (780) இப்பாடலோடு சேர்த்து எண்ணுக. சாமானிய தருமத்தை மேற்கொள்வார் இயல்பு உணர்த்தியவாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “If a thoughtless lord sets his mind on evil, then if one can check it
- and correct him, one should correct him, surely; but if it cannot be cured,
- is there anything worth gaining by going over? To take up the work of war
- and die before one's master—that is what is due from those who have eaten his food.”
What the poem says
Kumpakaruṇaṉ states his own code. When a king who will not listen to counsel plans evil, his followers should try to stop him and set him right. If he cannot be corrected, the answer is not to desert to his enemies. One who has eaten a master's food owes him one thing: to fight for him and die in front of him.
For Kumpakaruṇaṉ, loyalty to kin and lord comes before abstract righteousness. The commentary compares Tirukkuṟaḷ 780, which says a death that makes one's patron weep is worth begging for.