கம்பராமாயணம் 7471 · யுத்த 15.158

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘தும்பி அம் தொடையல் வீரன்சுடுகணை துரப்ப, சுற்றும்
வெம்பு வெஞ் சேனையோடும்,வேறு உள கிளைஞரோடும்,
உம்பரும் பிறரும் போற்றஒருவன் மூவுலகை ஆண்டு,
தம்பியர் இன்றி மாண்டுகிடப்பனோ தமையன் மண்மேல்.

பொருள் · Meaning in Tamil

உம்பரும் பிறரும் போற்ற - தேவர்களும் மற்றுள்ளோரும் போற்றி வணங்குமாறு; மூவுலகை தமையன் ஒருவன் ஆண்டு - மூன்று உலகங்களையும் ஒப்பற்றவனாய் ஆண்டவனாகிய அண்ணன்; தும்பி அம் தொடையல் வீரன் - வண்டுகள் மொய்க்கின்ற அழகிய மலர் மாலையை அணிந்த வீரனாகிய இராமன்; சுடுகணை துரப்ப - சுடுகின்ற அம்புகளைச் செலுத்துவதால்; வெம்பு வெஞ்சேனையோடும் - வாடுகின்ற சினம் மிக்க படைகளுடனும்; வேறு உள கிளைஞரோடும் - பிற உறவினர்களுடனும்; தம்பியை இன்றி - தனக்காக இறக்கத் தம்பியும் இன்றி; மண் மேல் மாண்டு கிடப்பனோ - மண் மேல் இறந்து கிடப்பதற்கு உரியவனா?

எதிர்காலக் காட்சியை மனக்கண்ணில் கண்டு கும்பகருணன் கூறியது. அவனுக்காகப் படைவீரர்களும் உறவினர்களும் இறந்து கிடக்கும் களத்தில் இரு தம்பியர் இருந்தும் தம்பியர் இன்றி மாள இராவணன் விட்டு விடுதல் தகுதியானது அன்று என்று கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “When the hero with the bee-haunted garland looses his burning arrows,
  2. shall my elder brother, who alone ruled the three worlds
  3. praised by gods and all others, lie dead on the earth
  4. with his raging army all around and his other kin, but without his younger brother?”

What the poem says

Kumpakaruṇaṉ pictures the end. Irāvaṇaṉ once ruled the three worlds and was honoured by gods and everyone else. When Irāmaṉ's arrows bring him down, he will lie on the battlefield among his slaughtered army and relatives. Should he lie there with neither of his two younger brothers beside him? Kumpakaruṇaṉ will not allow that.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘tumpi am toṭaiyal vīraṉ cuṭu kaṇai turappa, cuṟṟum
vempu veñ cēṉaiyōṭum, vēṟu uḷa kiḷaiñarōṭum,
umparum piṟarum pōṟṟa oruvaṉ mūvulakai āṇṭu,
tampiyai iṉṟi māṇṭu kiṭappaṉō tamaiyaṉ maṇmēl.