கம்பராமாயணம் 7472 · யுத்த 15.159
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பிணை ஒன்று கண்ணாள் பங்கன் -பெண் மானின் கண்ணை ஒத்த கண் உடைய உமையம்மையை இடப்பக்கத்தில் கொண்ட சிவபிரானது; பெருங்கிரி நெருங்கப் பேர்த்த - பெரிய மலையாகிய கைலாயத்தை நெருங்கிப் பெயர்த்தெடுத்த; பணை ஒன்று திரள்தோள் - பெருமை பொருந்திய திரண்ட தோள்கள்; கால பாசத்தால் பிணிப்ப - இயமனது கால பாசத்தால் பிணிக்கப்படுவது கண்டு; அணை இன்றி உயர்ந்த வென்றி அஞ்சினார் - முன்பு தடையில்லாமல் பெற்ற வெற்றி கண்டு அச்சங்கொண்ட மாற்றார்; நகையது ஆக கூசி - நகைத்துப் பேரொலி செய்ய அதற்கு நாணி; தோற்றுள கூற்றின் சூழல் -முன்பு தனக்குத் தோற்றவனாகிய இயமன் இடத்தில்; துணை இன்றிச் சேறல் நன்றோ - துணையாகத் தம்பியும் இல்லாமல் செல்லுவது நன்றாக உள்ளதோ.
தோற்ற இயமனிடம் இராவணன் தம்பியர் இன்றித் தோற்றுச் செல்லுதல் நன்றாக உள்ளதோ என்று கும்பகருணன் வினவுவதால் அவனுக்காகத் தம்பியர் இறப்பதே குலத்து மானம் காக்கும் செயல் என்று கூறியவாறு காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “While those who feared his unchecked, towering victories laugh,
- and his massive shoulders that heaved up the great mountain of Him whose half is the doe-eyed lady
- are bound by Death's noose—is it good that he should go, shamed,
- without a companion, into the realm of the Death he once defeated?”
What the poem says
Irāvaṇaṉ once lifted Mount Kailāsa, home of Civaṉ, whose body is shared with the doe-eyed Umā. He has also defeated Yama. Now his enemies, who once feared his victories, will laugh as Death's noose binds those mighty shoulders.
Kumpakaruṇaṉ asks whether Irāvaṇaṉ should enter Yama's realm alone and humiliated, with no brother beside him. A brother's dying for him is what will save the family's honour.