கம்பராமாயணம் 7473 · யுத்த 15.160

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐய! - ஐயனே; கூற்றையும் ஆடல் கொண்டேன் - கூற்றுவனையும் வெற்றி கொண்டவனாகிய, யான் - நான்; செம்பு இட்டுச் செய்த இஞ்சித் திருநகர் - செம்பை உருக்கி வலிமையும் அழகும் படச் செய்த மதிலால் சூழப்பட்ட அழகிய இலங்கை நகரின்; செல்வம் தேறி - அரசுச் செல்வத்தை நிலையானது என்று கருதி; வம்பு இட்ட தெரியல் எம்முன் - மணம் பொருந்திய மலர் மாலையணிந்த என் அண்ணனுடைய; உயிர் கொண்ட பகையை வாழ்த்தி - உயிரைக் கொண்ட பகைவனாகிய இராமனை வாழ்த்திக் கொண்டு; அம்பு இட்டுத் துன்னம் கொண்ட - அம்பு பட்டுத் துளைபட்ட; புண்ணுடை நெஞ்சோடு -புண்பட்ட நெஞ்சத்துடன்; கும்பிட்டு வாழ்கிலேன் - கும்பிட்டு வாழ மாட்டேன்.

இராவணன் இறந்து விட்டாலும் யான் இராமனைச் சேரேன் என்பதை எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி என்ற தொடரால் கும்பகருணன் குறிப்பிடுகிறான். மனத்தில் அண்ணனைக் கொன்றவன் என்ற எண்ணத்தையும் உடம்பில் அம்பிட்டுத் துன்னம் கொண்ட மார்பையும் கொண்டு வெளிக்கு இராமனை வாழ்த்த என்னால் முடியாது என்றதாம். இப்பகுதியில் கும்பகருணனின் குலத்துக்குரிய மான உணர்வும் உடன்பிறப்புப் பாசமும் விளக்கப்பட்டமை காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Trusting in the wealth of this fair city walled with molten copper,
  2. praising the foe who took the life of my elder brother with his fragrant garland,
  3. with a heart wounded and pierced through by arrows, sir,
  4. I will not live on with folded hands—I who have made sport even of Death!”

What the poem says

Kumpakaruṇaṉ has defeated even Death, and he refuses to save himself. He will not accept the wealth of Ilaṅkai, with its walls of molten copper, and live as a servant who praises the man who killed his brother. His heart would be as torn as a body pierced by arrows.

The phrase "the foe who took my brother's life" shows that he would not join Irāmaṉ even after Irāvaṇaṉ's death. The verse brings out his pride in his clan and his love for his brother.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘cempu iṭṭuc ceyta iñcit tiru nakarc celvam tēṟi,
vampu iṭṭa teriyal emmuṉ uyir koṇṭa pakaiyai vāḻtti,
ampu iṭṭut tuṉṉam koṇṭa puṇṇuṭai neñcōṭu aiya!
kumpiṭṭu vāḻkilēṉ yāṉ kūṟṟaiyum āṭal koṇṭēṉ!