கம்பராமாயணம் 7474 · யுத்த 15.161
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அனுமனை - அனுமனையும்; வாலி சேயை - வாலி மகனாகிய அங்கதனையும்; அருக்கன் சேய் தன்னை - சூரியன் மகனாகிய சுக்கிரீவனையும், அம்பொன்தனு உடையவரை - அழகிய பொன் போன்ற வில்லையுடைய இராம இலக்குவர்களையும்; வேறு ஓர் நீலனை - வேறுபட்ட தன்மையுடைய நீலனையும்; சாம்பன் தன்னை - சாம்பவான் தன்னையும்; கனி தொடர் குரங்கின் சேனைக் கடலையும் - கனியைக் கைப்பற்றத் தொடர்ந்து செல்லும் குரங்குகளின் சேனையாகிய கடலையும்; கடந்து - வஞ்சியாது எதிர் நின்று வென்று; உலகம் மூடும் பனிதுடைத்து - உலகத்தை மூடுகின்ற பனியைப் போக்கி, சுற்றும் பரிதியின் திரிவென் - வலமாகச் சுற்றுகின்ற கதிரவன் போல் திரிவேன்; பார்த்தி - காண்பாய்.
இப்பாடல் முதல் கும்பகருணன் தான் போர்க் களத்தில் காட்ட இருக்கின்ற போர்த்திறனை வீடணனுக்குக் கூறுகிறான். பாடலில் வரும் பாத்திரப் பெயர் அடுக்கு வரிசை முறையில் அனுமனை முன் கூறினான் இலங்கையைச் சுட்டதை நினைவில் கொண்டு என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Aṉumaṉ, Vālī's son, the Sun's son, the two
- who bear beautiful golden bows, Nīlaṉ the singular, Cāmpaṉ,
- and the sea of the monkey army that chases after fruit—all these I will overcome,
- and range like the sun that wipes away the mist that covers the world and circles it. Watch!”
What the poem says
From this verse on, Kumpakaruṇaṉ tells Vīṭaṇaṉ how he will fight. He will defeat Aṉumaṉ; Aṅkataṉ, Vālī's son; Cukkirīvaṉ, son of the Sun; the two princes with their golden bows; Nīlaṉ; Cāmpaṉ, or Jāmbavāṉ; and the whole sea of fruit-chasing monkeys. Like the sun burning away the mist, he will sweep across the field.
He names Aṉumaṉ first because Aṉumaṉ burned Ilaṅkai.