கம்பராமாயணம் 7475 · யுத்த 15.162

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆலம் கண்டு அஞ்சி ஓடும் - ஆல கால நஞ்சைக் கண்டு அஞ்சி ஓடிய; அமரர் போல் அரிகள் ஓட -தேவர்களைப் போல் வானரப் படைகள் ஓட; வேலை சூலம் கொண்டு ஓடி - ஒரு கடல் ஆனது சூலத்தைக் கையில் கொண்டு ஓடி; தொடர்வது ஓர் தோற்றம் தோன்ற - மற்றொரு கடலைத் தொடர்ந்து செல்வது போல் ஒரு தோற்றத்தை உண்டாக்கி; நீலம் கொள் கடலும் ஓட- நீல நிறங்கொண்ட கடல் தன் இடம் விட்டுப் புடை பெயர்ந்து செல்லவும்; நெருப்பொடு காலும் ஓட - நெருப்பும் காற்றும் நிலை கெட்டு ஓடவும்; காலம் கொள் உலகும் ஓட - அழிவுக் காலத்தை நோக்கி உலகமும் ஓடவும்; கறங்கு எனத் திரிவென் காண்டி - (போர்க்களத்தில் நான்) காற்றாடி போலத் திரிவேன் அதனைக் காண்பாய்.

கும்பகருணன் குரங்குச் சேனையைத் துரத்தி ஓடுவது ஒரு கடல் மற்றொரு கடலையோடித் தொடர்வது போன்ற தோற்றம் தந்தது என்க. தன் போரிடும் திறத்தால் பஞ்சபூதங்களில் ஆகாயம் தவிர கடல், நெருப்பு, காற்று, நிலம் ஆகிய நான்கு பூதங்களும் நிலை பெயர்ந்து ஓடும் என்கிறான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “As the monkeys run like the gods who fled in fear on seeing the poison,
  2. I will run with my trident, so that it looks like one sea chasing another;
  3. the blue sea too will run, fire and wind will run,
  4. the world that time has seized will run, as I whirl like a spinning top. Watch!”

What the poem says

Kumpakaruṇaṉ promises a terrifying display. The monkeys will flee from him as the gods fled the poison that rose from the churned ocean of milk. A dark giant chasing a dark army will look like one sea chasing another. Water, fire, wind and earth, four of the five elements, will be thrown from their places while he spins across the battlefield like a top.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ālam kaṇṭu añci ōṭum amararpōl arikaḷ ōṭa,
cūlam koṇṭu ōṭi, vēlai toṭarvatu ōr tōṟṟam tōṉṟa,
nīlam koḷ kaṭalum ōṭa, neruppoṭu kālum ōṭa,
kālam koḷ ulakum ōṭa, kaṟaṅku eṉat tirivaṉ; kāṇṭi!