கம்பராமாயணம் 7476 · யுத்த 15.163
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செருவிடை அஞ்சார் வந்து - போர்க்களத்தில் அஞ்சாதவராய் வந்து; என்கண் எதிர் சேர்வர் ஆகின் - என் கண்ணுக்கு எதிரில் சேர்வார்கள் ஆனால்; கருவரை - கரிய மலையும்; கனகக்குன்றம் - பொன் குன்றமும்; என்னல் ஆம் காட்சி தந்த - என்று கூறுமாறு தோற்றம் பொருந்திய; இருவரும் நிற்க - இராம இலக்குவர் நிற்க; மற்று அங்கு யார் உளர்- வேறு அங்கு உள்ளவர் எவரோ?; அவரை எல்லாம் - அவர்களை எல்லாம்; உலகில் உயிர் சுமந்து - உலகத்தில் உயிர் சுமந்து கொண்டு; ஒருவரும் திரிய ஒட்டேன் - ஒருவரையும் நடமாட ஒருப்படேன்; என்றான்.
அம்பொன் தனு உடையவரை (16) என முன்பு போர் ஆவேசத்தால் கூறியவன், 'கருவரை கனகக்குன்றம் என்னல் ஆம் காட்சி தந்த இருவரும் நிற்க' என்று பகை வலி உணர்ந்து இங்குக் கூறினான் என்க. இராம லக்குவரைக் கொல்லல் தன்னால் இயலாது என்பதை உணர்ந்து கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “If, unafraid in battle, they come and face my eyes—
- leaving aside the two who look like a dark mountain and a golden hill—
- whoever else is there, all of them,
- I will not let a single one go about the world still carrying his life,” he said.
What the poem says
Kumpakaruṇaṉ will spare no one who dares to face him, with one exception. He sets aside the two princes, Irāmaṉ like a dark mountain and Ilakkuvaṉ like a golden hill.
In his earlier excitement he included them among those he would defeat. Now, more soberly, he admits that he cannot kill them.