கம்பராமாயணம் 7477 · யுத்த 15.164

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
“
‘
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘தாழ்க்கிற்பாய் அல்லை, என் சொல்தலைக் கொளத் தக்கது என்று
கேட்கிற்பாய் ஆயின், எய்தி,அவரொடும் கெழீஇய நட்பை
வேட்கிற்பாய்; “இனி ஓர் மாற்றம்விளம்பினால் விளைவு உண்டு “ என்று
சூழ்க்கிற்பாய் அல்லை; யாரும்தொழ நிற்பாய், ‘ என்னச் சொன்னான்.

பொருள் · Meaning in Tamil

யாரும் தொழ நிற்பாய்! - பிறர் தொழத்தக்க மேன்மை பெற்றவனே; என் சொல் தலைக் கொளத்தக்கது - என் சொல் ஆனது தலையில் ஏற்கத்தக்கது; என்று கேட்கிற்பாய் ஆகின் - என்று கருதிக் கேட்பாய் ஆனால்; தாழ்க்கிற்பாய் அல்லை - காலந்தாழ்த்தாமல், எய்தி - திரும்பிப் போய்; அவரொடும் கெழீஇய நட்பை வேட்கிற்பாய்- அந்த இராம இலக்குவரோடு பொருந்திய நட்பை மேலும் விரும்புவாய்; இனி ஓர் மாற்றம் விளம்பினால் - இனிமேலும் ஒரு பேச்சுப் பேசினால்; விளைவு உண்டு என்று - அதனால் நன்மை உண்டு என்று; சூழ்க்கிற்பாய் அல்லை - எண்ணி ஆலோசிப்பதற்கு உரியவனல்லை; என்னச் சொன்னான் - என்று கூறினான்.

விளைவு உண்டு-அதனால் நான் மனம் மாறி வரும் விளைவு உண்டு என்று நினைத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Do not delay; if you will listen, holding my word
  2. as fit to be taken on your head, go back and
  3. cherish the friendship you have joined with them; do not think
  4. ‘if I say one more word, something will come of it,’ you whom all revere,” he said.

What the poem says

Kumpakaruṇaṉ tells Vīṭaṇaṉ, whom everyone honours, to heed his words. He should go back without delay and hold on to his friendship with Irāmaṉ and Ilakkuvaṉ. There is no point in pleading further in the hope that Kumpakaruṇaṉ will change his mind.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘tāḻkkiṟpāy allai, eṉ col talaikkoḷat takkatu eṉṟu
kēṭkiṟpāy ākiṉ, eyti, avaroṭum keḻīiya naṭpai
vēṭkiṟpāy; “iṉi ōr māṟṟam viḷampiṉāl viḷaivu uṇṭu “ eṉṟu
cūḻkkiṟpāyallai; yārum toḻa niṟpāy, ‘ eṉṉac coṉṉāṉ.