கம்பராமாயணம் 7480 · யுத்த 15.167
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்று - என்று கூறி; அவன் தன்னை - அந்த வீடணன் தன்னை; மீட்டும் எடுத்து - மறுமுறை மீண்டும் எடுத்து; மார்பு இறுகப் புல்லி - மார்பில் அழுத்தமாகத் தழுவி; நின்று நின்று - மிக நீண்ட நேரம்; இரங்கி ஏங்கி - அழுது ஏக்கம் கொண்டு; நிறை கணால் நெடிது நோக்கி - நீர்நிறை கண்ணால் நீண்ட நேரம் பார்த்து; உடன்பிறப்பு - உனக்கும் எனக்கும் உள்ள உடன்பிறப்பு என்னும் தொடர்பு; இன்றொடும் தவிர்ந்தது அன்றே -இன்றோடு போய் விட்டதல்லவா?; என்று விட்டான் - என்று கூறித் தழுவியதை விட்டான்; வென்றி வெந்திறலினானும் - வெற்றியும் வலிய வலிமையும் உள்ள வீடணனும்; அவன் அடித்தலத்து வீழ்ந்தான் - அந்தக் கும்பகருணனது அடித்தலத்து வீழ்ந்து வணங்கினான்.
இப்பாடலில் பாசத்தைப் பெரிதென மதித்தவன் அதைக் களைந்தெறியம் பட்ட மனத்துன்பங்கள் பேசப்படுகின்றன. மார்பு இறுகப் புல்லல், நின்று நின்று இரங்கி ஏங்கல், நிறை கணால் நெடிது நோக்கல் போன்ற மெய்ப்பாடுகள் வழி அவனது மனத்துன்பம் விளக்கப்படுகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So saying, he lifted him up once more and held him tight against his chest,
- and long, long he grieved and sighed, and gazed at him long with brimming eyes;
- “Our brotherhood ends with today, does it not?” he said, and let him go;
- and he of fierce, victorious might fell at his feet.
What the poem says
The brothers part for ever. Kumpakaruṇaṉ lifts Vīṭaṇaṉ again and holds him close for a long time, weeping and gazing at him with tear-filled eyes. "Our bond as brothers ends today," he says, and lets him go. Vīṭaṇaṉ falls at his feet.
Kumpakaruṇaṉ values family love above all else, so tearing it out costs him great pain. The poet shows that pain through his gestures: the tight embrace, the long weeping and the lingering look.