கம்பராமாயணம் 7483 · யுத்த 15.170
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எய்திய நிருதர் கோனும் - இராமனை வந்து அடைந்த அரக்கர் தலைவன் ஆகிய வீடணனும்; இராமனை இறைஞ்சி - இராமனை வணங்கி, எந்தாய்!- எந்தையே; உய்திறம் உடையார்க்கு அன்றோ - தீமையில் இருந்து தப்புறெ மனக்கூறுபாடு உடையவர்களுக்கல்லவா?; அறன் வழி ஒழுகும் உள்ளம் - அற வழியில் செல்லும் மனம் அமையும்; பெய்திறன் எல்லாம் பெய்து பேசினென் - செலுத்த வல்ல விரகு எல்லாம் செலுத்திப் பேசினேன்; பெயருந்தன்மை செய்திலன் - மனம் மாறும் தன்மையை அவன் மேற்கொள்ளவில்லை; குலத்து மானம் சிறிதும் தீர்ந்திலன் என்றான் - குலப்பற்று சிறிது கூட தீரப் பெற்றானில்லை என்றான்.
'பெய்திறன் எல்லாம் பெய்து பேசுதல்' என்பது காரண காரியங்களோடு வீடணன் கும்பகருணனுக்கு விளக்கிக் கூறியதை நினைவு கூர்ந்து வந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The demon lord, arriving, bowed to Irāmaṉ: “My father!
- Is not a heart that follows the path of righteousness only for those destined to be saved?
- I poured out every skill I had as I spoke; he did not
- turn; he has not let go the least of his pride in our clan,” he said.
What the poem says
Vīṭaṇaṉ returns to Irāmaṉ, bows and reports that he has failed. Only those destined to be saved have hearts that follow righteousness. He used every argument he could, but Kumpakaruṇaṉ would not change his mind or give up the smallest part of his pride in the clan.