கம்பராமாயணம் 7487 · யுத்த 15.174
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வாள் எயிற்று அரக்கர் - ஒளி பொருந்திய பற்களை உடைய அரக்கர்கள்; அம்பொன் தோளொடு - அழகிய பொன் போன்ற நிறமுடைய தோளும்; மரனும் கல்லும் தாக்க - மரமும் கல்லும் தாக்கியதால், மூளையும், தசையும் என்பும் குருதியும், நிணமும், மூரி வாளொடும் குழம்பு பட்டார் - மூளையும்,தசையும், எலும்பும், குருதியும், கொழுப்பும், கையில் ஏந்திய வலிய வாள் படையுடனே குழம்பாகி அழிந்தார்கள்; கவிகள் - குரங்குகள்; சூலமும் வேலும் தாக்க - முத்தலைச் சூலமும் வேலும் தாக்கியதால், மற்று அவ் - மற்று அந்த; ஆள் அழி குருதி வெள்ளத்து அழுந்தின - ஆளை அழிக்கக்கூடிய அரக்கரின் குழம்பு பட்ட குருதி வெள்ளத்தில் அழுந்தின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Brain and flesh and bone and blood and fat, along with their mighty
- swords, the bright-tusked demons were pounded to a paste; and the monkeys
- sank into that flood of blood where men were destroyed,
- as golden shoulders, trees and stones, tridents and spears struck.
What the poem says
The fighting is brutal on both sides. The monkeys hit the demons with their golden shoulders and with trees and rocks, crushing them, swords and all, into a pulp of brains, flesh, bone, blood and fat. The demons' tridents and spears strike the monkeys, who sink and drown in the flood of blood.