கம்பராமாயணம் 7490 · யுத்த 15.177
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவனியில் பட்ட எல்லாம் - பூமியில் பொருந்திய வானரங்கள் எல்லாம்; ஊழியில் பட்ட காலின் - உக முடிவுக் காலத்தில் வீசுகின்ற காற்றில்; உலகங்கள் பட்டால் ஒப்ப - உலகங்கள் அகப்பட்டதைப் போல; பூழியில் பட்டு - புழுதியில் அகப்பட்டும்; செந்நீர்ப் புணரியில் பட்டு - குருதிக் கடலில் பட்டும்; பொங்கும் சூழியின் பட்ட நெற்றிக் களிற்றொடும் - விளங்குகிற முகபடாத்தொடு பட்டமும் கட்டிய நெற்றியையுடைய களிறுகளிலும்; துரந்ததேரின் ஆழியில் பட்ட அன்றே - செலுத்துகிற தேர்ச்சக்கரங்களிலும் பட்டு இறந்து போயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like worlds caught in the wind that blows at the end of an age,
- caught in the dust, caught in the sea of red blood,
- caught by elephants with gleaming frontlets on their brows, and by the wheels
- of the speeding chariots—so were all the monkeys on the ground cut down.
What the poem says
As Kumpakaruṇaṉ's army advances, the monkeys on the ground are crushed like worlds swept away by the wind at the end of an age. They are smothered in dust, drowned in the sea of blood, trampled by elephants with ornamented foreheads, and ground under chariot wheels. Each line repeats the word for "caught" or "fallen".