கம்பராமாயணம் 7491 · யுத்த 15.178

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குன்று கொண்டு எறியும் - கும்பகருணன் வானரப் படை மீது குன்றை வீசி எறிவான்; பாரில் குதிக்கும் - நிலத்தில் குதிப்பான்; வெங்கூலம் பற்றி - கொடிய வாலினைப் பிடித்து; ஒன்று கொண்டு ஒன்றை எற்றும் - ஒன்றைக் கொண்டு பிறிது ஒன்றின் மீது மோதுவான்; உதைக்கும் - உதைப்பான்; விட்டு உழக்கும்- போக விட்டுக் காலினால் துகைப்பான்; வாரித் தின்று தின்று உமிழும் - வாரித் தின்று தின்று உமிழ்வான்; சிரங்களைப் பற்றித் திருகும் - தலைகளைப் பிடித்துத் திருகுவான்; தேய்க்கும் - பூமியில் தேய்ப்பான்; மென்று மென்று இழிச்சும் -வாயில் போட்டு மென்று துப்புவான்; விண்ணில் வீசும் - வானத்தில் எறிவான்; பிசைந்து மேல் பூசும் - பிசைந்து உடம்பின் மேல் பூசிக்கொள்வான்.

எறியும், குதிக்கும், எற்றும், உதைக்கும், உமிழும், திருகும், இழிச்சும், வீசும், பூசும் என்ற சொற்களின் மூலம் கும்பகருணன் குரங்குப் படையை அழித்த முறையினைக் கவிஞர் விளக்குகிறார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He hurls hills; he leaps on the earth; seizing their fierce tails
  2. he smashes one monkey against another; he kicks; he lets them go and tramples them; scooping them up
  3. he eats and eats and spits them out; he grabs their heads and wrings them; he grinds them;
  4. he chews and chews and spews them; he flings them into the sky; he crushes them and smears himself.

What the poem says

Kumpakaruṇaṉ himself now attacks the monkey army. The verse piles up verbs to show how many ways he destroys them. He throws hills, leaps, swings monkeys by their tails to smash them against each other, and kicks and tramples them. He scoops them up and eats and spits them out, twists off their heads, grinds them into the ground, flings them into the sky, and crushes them into a paste that he smears over his body.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuṉṟu koṇṭu eṟiyum; pāril kutikkum; veṅ kūlam paṟṟi
oṉṟu koṇṭu oṉṟai eṟṟum; utaikkum; viṭṭu uḻakkum; vārit
tiṉṟu tiṉṟu umiḻum; paṟṟic ciraṅkaḷait tirukum; tēykkum;
meṉṟu meṉṟu iḻiccum; viṇṇil vīcum; mēl picaintu pūcum