கம்பராமாயணம் 7493 · யுத்த 15.180
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அமரர் அஞ்சி பறைந்தனர்- தேவர்கள் அஞ்சிப் பறந்து ஓடினார்கள்; பல்பெரும் பிணத்தின் பம்மல் நிறைந்தன - எங்கும் பிணக்கூட்டங்கள் தொகுதியாய் நிறைந்தன; நெடுந்திசை நான்கும் நான்கும் பறவை எல்லாம் மறைந்தன - நெடுந்திசை நான்கு, கோணத்திசை நான்கு ஆகிய எட்டுத்திசைகளையும் பறவைக் கூட்டங்கள் மறைத்தன; மலைக்குலம் பெருமை தீர்ந்த - மலைக்கூட்டங்கள் பெருமையை இழந்தன; குரக்கு வெள்ளம் வற்றி வற்றிக் குறைந்தன - எழுபது வெள்ளங்கொண்ட குரங்குப் படை சிறிது சிறிதாகக் குறைந்தன; கூற்றும் கூச கொன்றனன் - கும்பகருணன் இவ்வாறு யமனும் அஞ்சும்படி குரங்குச் சேனையைக் கொன்றான்.
பறைந்தனர் பறந்தனர் பம்மல்- தொகுதி, மிகுதியெனினுமாம். பெருமை தீர்ந்த மலைக்குலம்- பிறவற்றை விட உயர்ந்து இருக்கின்ற பெருமை நீங்கியது என்றவாறு. கும்பகருணன் கொன்ற குரங்குப் படையின் குவியல் மலையின் பெருமை தீர்த்ததென்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The gods fled in fear; with heaps of many great corpses
- all the birds were sated; the four long quarters and the four between
- were hidden; the ranks of mountains lost their greatness; dwindling and dwindling,
- the flood of monkeys shrank; he killed till Death himself recoiled.
What the poem says
The gods flee in terror. Heaps of corpses fill the field, and flocks of carrion birds blot out all eight directions. The piles of dead monkeys are so high that the mountains no longer seem tall. The monkey army, counted in vast units called "floods", shrinks steadily. Kumpakaruṇaṉ kills so many that even Yama shrinks back.