கம்பராமாயணம் 7494 · யுத்த 15.181

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘மற்று இனி ஒருவன்மேல்ஓர் மரனொடும் கற்கள் வீசப்
பெற்றிலம் ஆதும் அன்றே;இன்றொடும் பெறுவது ஆமேல்
அற்றன தீங்கும் ‘என்னாஅரிக்குலத் தலைவர் பற்றி,
எற்றின எறிந்த, எல்லாம்இணை நெடுந்தோளில் ஏற்றான்.

பொருள் · Meaning in Tamil

மற்று இனி - இனி; ஒருவர் மேல் வீச - வேறு ஒருவர் மேல் எறிவதற்கு; ஓர் மரனொடும் கற்கள் பெற்றிலம் ஆதும் - ஒரு மரமாவது கற்கள் ஆவது பெறாதவர் ஆவோம்; இன்றொடும் பெறுவது ஆமே - எல்லாவற்றையும் இன்றே எடுத்து இவன் மீது எறிவோம்; தீங்கும் அன்றே அற்றன என்னா - இவனால் விளையும் அழிவும் முழுதும் நீங்கிவிடும் என்று; அரிக்குலத்தலைவர் - குரங்குப் படைத்தலைவர்கள்; எற்றின எறிந்த எல்லாம் -காலால் எற்றினவும் கையால் எறிந்தனவுமாகிய எல்லாவற்றையும்; இணை நெடுந்தோளின் ஏற்றான் -தனது இரு பெருந்தோள்களில் தாங்கிக் கொண்டான்.

பிறர் மீது எறிவதற்கு மரமும் கற்களும் இல்லாது எல்லாவற்றையும் இவன் மீது எறிந்து இவனை அழித்துப் பகை முடிப்போம் என்று எண்ணி அரிக்குலத்தலைவர் எற்றின எறிந்த எல்லாம் இணை நெடும் தோளின் ஏற்றான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “After this we shall have not a single tree or stone left
  2. to throw at anyone else; let it all go today,
  3. and the harm will be ended,” said the monkey chiefs, and seized
  4. and kicked and hurled everything—and he took it all on his two long shoulders.

What the poem says

The monkey chiefs decide to throw everything at Kumpakaruṇaṉ at once, even if no tree or stone is left for any other enemy. If they can kill him today, the danger will be over. They kick and hurl every tree and rock they can find, but Kumpakaruṇaṉ simply takes the blows on his huge shoulders.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘maṟṟu iṉi oruvarmēl ōr maraṉoṭum kaṟkaḷ vīcap
peṟṟilam ātum aṉṟē; iṉṟoṭum peṟuvatu āmē
aṟṟaṉa tīṅkum ‘eṉṉā arik kulat talaivar paṟṟi,
eṟṟiṉa eṟinta, ellām iṇai neṭun tōḷiṉ ēṟṟāṉ.