கம்பராமாயணம் 7495 · யுத்த 15.182

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கல்லொடு மரனும், வேரும்,கட்டையும், காலில் தீண்டும்
புல்லொடு பிறவும் என்ன,பொடிப் பொடி ஆகிப் போன,
‘இல்லை, மற்று எறியத் தக்க,எற்றுவ, சுற்றும் என்ன,
பல்லொடு பல்லுமென்றுபட்டன குரங்கு முட்டி.

பொருள் · Meaning in Tamil

காலில் தீண்டும் - காற்றுப் போல் விரைவாகத் தீண்டுகிற, கல்லொடு மரனும் வேரும் கட்டையும் புல்லொடு பிறவும் - கற்கள், மரங்கள், வேர்கள் கட்டைகள், புற்கள் மற்றயாவும் குரங்குப் படையால் எறியப்பட்டு; எல்லாம் - முழுதும்; பொடிப் பொடி ஆகிப் போன -கும்பகருணன் உடம்பில் பட்டுப் பொடிப் பொடியாய்ப் போயின; சுற்றும் எற்றுவ எறியத்தக்க மற்று இல்லை என்ன - சுற்றிலும் காலால் எற்றவும் கையால் எறியவும் எப்பொருளும் இல்லை என்று எண்ணி; குரங்கும் உட்கி பல்லொடு பல்லு மென்று பட்டன- குரங்குப் படைகள் அஞ்சிப் பல்லைக் கடித்துக் கொண்டு இறந்தன.

எற்றுவ எறிவ இல்லாமையால் பல்லொடு பல்லுமென்று உட்கிக் குரங்குகள் பட்டன என்க. உட்கி-அஞ்சி. காலில் தீண்டும்-காற்றைப் போல் கும்பகருணனைத் தீண்ட வீசப்பட்டவை. புல்-புறக்காழ் உடைய மூங்கில், தென்னை, பனை முதலியவை, வெறும் புல் எனின் பொருந்தாமை உணர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Stones and trees, roots and logs, and palms and the rest,
  2. all that struck him swift as the wind, were ground to powder;
  3. “There is nothing left around us to kick or throw!” they cried,
  4. and the monkeys, gnashing tooth on tooth in terror, fell.

What the poem says

Everything the monkeys throw, including stones, trees, roots, logs, bamboo and palms, shatters to dust against Kumpakaruṇaṉ's body. When nothing is left to throw, the monkeys grind their teeth in helpless fear and die.

The word usually translated as "grass" here means hard-skinned plants such as bamboo and palm, not ordinary grass.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kalloṭu maraṉum, vērum, kaṭṭaiyum, kālil tīṇṭum
pulloṭu piṟavum ellām, poṭip poṭi ākip pōṉa,
‘illai, maṟṟu eṟiyat takka, eṟṟuva, cuṟṟum eṉṉa,
palloṭu pallu meṉṟu paṭṭaṉa kuraṅkum uṭka.