கம்பராமாயணம் 7496 · யுத்த 15.183
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குழாம் கொடு குதித்துக் கூடி - குரங்குகள் கூட்ட மாகக் குதித்துக் கூடிக்கொண்டு; குன்றின் வீழ் குரீஇக் குழாத்தின் - மலையின் மீது விழுகின்ற குருவிக் கூட்டம் போல; சென்று - கும்பகருணனை நோக்கிச் சென்று; மேல் எழுந்து பற்றி - உடம்பின் மேல் ஏறிப் பற்றி; கைத்தலம் தேயக் குத்தி - கை வருந்தும்படி குத்தியும்; வன்திறல் எயிற்றால் கவ்வி - மிக்க வலிமை உடைய பற்களால் கவ்வியும்; வள் உகிர் மடியக் கீளா - கூரிய நகங்கள் நுனி மடங்கும்படி கிழித்தும்; ஒன்றும் ஆகின்றது இல்லை என்று - நம்மால் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை என்று தெரிந்து; இரிந்து ஓடிப் போன - இறங்கி ஓடிப் போயின.
குரங்குக் குழாம் குதித்துக் கூடிப் பற்றியும் குத்தியும், கவ்வியும் தீண்டும் ஒன்றும் ஆகின்றது இல்லை என்று இரிந்து ஓடிப் போயின என்க. கீளா-கிழித்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like a flock of sparrows settling on a hill, leaping together in swarms,
- they went and climbed up on him and clung, punched till their hands were worn,
- bit with their strong teeth, clawed till their sharp nails bent back,
- and finding that nothing came of it, they scattered and ran away.
What the poem says
The monkeys swarm over Kumpakaruṇaṉ like sparrows landing on a hill. They climb on him and punch until their hands are raw, bite with their strong teeth and claw until their nails bend. Nothing hurts him, so they give up and run.