கம்பராமாயணம் 7498 · யுத்த 15.185
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பெயர்ந்து -பின் வாங்கி மீண்டும்; ஒரு சிகரம் தேடின் -ஒரு மலையைத் தேடித் திரிந்தால்; பிறர்க்கும் அச்சம் ஆம் என்னா - பிற படை வீரர்களுக்கு அச்சம் தோன்றும் என்று கருதி; புயங்களே படைகள் ஆக - தன் தோள்களையே படைக்கலமாகக் கொண்டு; தேர் எதிர் ஓடிப் புக்கான் -அவனது தேருக்கு எதிரில் ஓடிப் புகுந்து; இயங்களும் - பல்வகை வாச்சியங்களும்; கடலும் - கடலும்; மேகத்து இடிகளும் - மேகத்தின் கண் தோன்றும் இடிகளும்; ஒழிய - ஓசையால் பின்னடையுமாறு; யாரும் பயங்கொள - யாவரும் அஞ்சும்படி; கரங்கள் ஓச்சிக் குத்தினான் - கைகளால் ஓங்கிக் குத்தினான்; பல்கால் உதைத்தான் - காலால் பலமுறை உதைத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “If I turn back to look for another peak, the others too will take fright,”
- he thought, and with his arms for weapons he ran in and charged at the chariot,
- and so that drums and the sea and the thunder of the clouds fell silent
- and all were seized with fear, he raised his fists and punched, and kicked him many times.
What the poem says
Nīlaṉ realises that if he goes back for another mountain, the other monkeys will take it as a sign of fear. He charges Kumpakaruṇaṉ's chariot with only his arms as weapons. He punches and kicks again and again, and the noise of his blows drowns out the war drums, the sea and the thunder, frightening everyone.