கம்பராமாயணம் 7500 · யுத்த 15.187
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆண்டு - அப்பொழுது; அது நோக்கி நின்ற அங்கதன் - நீலன் நிலையைப் பார்த்து நின்ற அங்கதன்; ஆண்டு - அங்கே இருந்த; சால நீண்டது ஓர் நெடுந் திண் குன்றம் - மிக நீண்டதாகிய ஒரு பெரிய மலையினை; நில முதுகு ஆற்ற வாங்கி - நிலமகள் தன் முதுகை ஆற்றிக் கொள்ளும்படி பெயர்த்து; அரக்கன் தம்பி மாண்டனன் - இராவணன் தம்பி மாண்டான். என்று உலகு ஏழும் வாழ்த்த - என்று ஏழுலகத்தவரும் வாழ்த்த; தூண்டினன் - எறிந்தான்; அதனை அன்னான் - அம்மலையை அந்தக் கும்பகருணன்; ஒரு தனித் தோளின் ஏற்றான் - தன் ஒப்பற்ற ஒரு தோளில் தாங்கிக் கொண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then Aṅkataṉ, who stood watching this, tore up a great, tall, solid hill
- that stood there, so that the earth's back was eased,
- and while all seven worlds cheered, “The demon's brother is dead!”
- he hurled it; and that one took it on a single shoulder.
What the poem says
Aṅkataṉ, Vālī's son, sees Nīlaṉ beaten and joins the fight. He pulls up a towering hill, and the earth is relieved of its weight. He throws it, and the seven worlds cheer as though Kumpakaruṇaṉ were already dead. Kumpakaruṇaṉ simply catches it on one shoulder.