கம்பராமாயணம் 7501 · யுத்த 15.188

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஏற்ற போது - அங்கதன் எறிந்த குன்றத்தைக் கும்பகருணன் தன் ஒரு தனித் தோளில் ஏற்றபோது; அனைய குன்றம் - அந்தக் குன்றானது; எண்ண அருந்துகளது ஆகி - எண்ணற்கு அருமையான தூளாகி, வீற்று வீற்று ஆகி - சின்ன பின்னப் பட்டு; ஓடி விழுதலும் - சிதறுண்டு விழுதலும்; கவியின் வெள்ளம் - குரங்குப் படையின் தொகுதி; எமக்கு ஊற்றம் ஏது என்று எண்ணி - எமக்கு வலிமையாவது யாது என்று எண்ணி; உடைந்தது - சிதறி ஓடியது; குமரன் - அங்கதன்; பாதம் பெயர்ந்திலன் - முன் வைத்த காலைப் பின் வைக்காது; உற்ற சீற்றமும் தானும் சென்று நின்றான் - பொருந்திய சினமும் தானுமாக முன் சென்று நின்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he took it, that hill turned to countless grains of dust,
  2. broke into pieces, and flew and fell; at that the flood of monkeys,
  3. thinking “What strength is left to us?” broke and fled; but the prince stood,
  4. he and his rage together, and did not move his feet the least bit.

What the poem says

The hill shatters into countless fragments against Kumpakaruṇaṉ's shoulder. The monkeys lose heart and scatter, thinking they have no strength left against him. Aṅkataṉ alone stands his ground in fury and does not take a single step back.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēṟṟa pōtu aṉaiya kuṉṟam eṇṇa arun tukaḷatu āki,
vīṟṟu vīṟṟu āki, ōṭi viḻutalum, kaviyiṉ veḷḷam,
‘ūṟṟam ētu, emakku! ‘eṉṟu eṇṇi, uṭaintatu; kumaraṉ uṟṟa
cīṟṟamum tāṉum niṉṟāṉ; peyarntilaṉ ciṟitum pātam.