கம்பராமாயணம் 7502 · யுத்த 15.189

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இடக்கையால் அரக்கன் ஆங்குஓர் எழு முனை வயிரத் தண்டு
தடுக்கலாம் தரத்தது அல்லாவலியது, தடுக்கின் வாங்கி
‘மடக்குவாய் உயிரை ‘என்னா,வீசினான்; அதனை மைந்தன்
தடக்கையால் பிடித்துக் கொண்டான்,வானவர் தன்னை வாழ்த்த.

பொருள் · Meaning in Tamil

ஆங்கு -அப்பொழுது; அரக்கன் - கும்பகருணன்; தடுக்கல் ஆம் தரத்தது அல்லா வலியது - தடுக்கக் கூடிய தன்மையுடையது அல்லாத வலிமையுடையதும்; ஓர் எழு முனை வயிரத் தண்டு -ஒப்பற்ற ஏழுமுனைகளையுடையதும் ஆன வலிய தண்டாயுதத்தை; இடக்கையால் -தன் இடது கையினால், தருக்கின் வாங்கி - செருக்கோடு எடுத்து; மடக்குவாய் உயிரை என்னா - இந்த அங்கதனுடைய உயிரை நீக்குவாய் என்று; வீசினன் - வீசினான்; அதனை மைந்தன் - அத்தண்டினை வலியுடைய அங்கதன்; வானவர் தன்னை வாழ்த்த - வானவர் தன்னை வாழ்த்தும்படி; தடக்கையால் பிடித்துக் கொண்டான் - தன் பெரிய கைகளினால் பிடித்துக் கொண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then the demon, with his left hand, proudly took up
  2. a seven-pointed adamantine mace, too mighty to be parried,
  3. and hurled it, saying, “Fold up his life!”; and the young hero
  4. caught it in his great hands, while the gods cheered him.

What the poem says

Kumpakaruṇaṉ scornfully picks up a hard, seven-spiked mace with his left hand. No one could block it. He throws it at Aṅkataṉ, telling it to finish him off. Aṅkataṉ catches it in his hands, and the gods cheer.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṭak kaiyāl arakkaṉ āṅku ōr eḻu muṉai vayirat taṇṭu
taṭukkal ām tarattatu allā valiyatu, tarukkiṉ vāṅki
‘maṭakkuvāy uyirai ‘eṉṉā, vīciṉāṉ; ataṉai maintaṉ
taṭak kaiyāl piṭittuk koṇṭāṉ, vāṉavar taṉṉai vāḻtta.