கம்பராமாயணம் 7505 · யுத்த 15.192
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நும்முனை - உனக்கு அண்ணனாகிய இராவணனை; வாலின் சுற்றி - வாலினால் சுற்றி; நோன் திசை நான்கும் தாவி - வலிய திசை நான்கிலும் தாவிச் சென்று; மும்முனை நெடுவேல் அண்ணல் - மூன்று முனையைக் கொண்ட முத்தலை வேல் ஏந்திய பெருமை உடைய சிவபிரானது; முளரி அம்சரணம் தாழ்ந்த - தாமரை மலர் போன்ற அழகிய திருவடிகளை வணங்கிய; வெம்முனை வீரன் மைந்தன் - கொடிய போர்த்திறம் மிக்க வீர வாலியின் மகன்; நின்னை என் வாலின் வீக்கி - யான் உன்னை என் தந்தை போல் வாலில் கட்டி; தெம்முனை இராமன் பாதம்- பகைப் புலத்துள்ள இராமனது திருப்பாதத்தை; வணங்கிடச் செல்வென் என்றான் - வணங்குவதற்காகச் செல்லுவேன் என்று கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “He who wrapped your elder brother in his tail, leapt across the four mighty quarters,
- and bowed at the lovely lotus feet of the lord with the long three-pronged spear—
- I am that fierce hero's son; I will bind you in my tail
- and go to make you bow at the feet of Irāmaṉ, the terror of his foes,” he said.
What the poem says
Aṅkataṉ answers proudly. He is the son of Vālī, the hero who once trapped Irāvaṇaṉ in his tail and leapt across the four quarters to worship at the feet of Civaṉ, holder of the trident. Just as his father dragged Irāvaṇaṉ about, he will tie Kumpakaruṇaṉ up in his tail and take him to bow at Irāmaṉ's feet.