கம்பராமாயணம் 7506 · யுத்த 15.193
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உந்தையை - உன் தந்தையை; ஓர் அம்பால் மறைந்து உயிருண்ட - ஓரம்பினால் மறைந்திருந்து உயிரைப் போக்கி; உதவியோற்கு - உதவி செய்தவனாக இராமனுக்கு; பந்தனைப் பகையைச் செற்றுக் காட்டலை என்னின் - கட்டாக உள்ள பகையை அழித்துக் கொடுக்காமல் போவாய் என்றால்; நின்னைப் பாரோர் நிந்தனை செய்வர் - உன்னை உலகில் உள்ளவர்கள் நிந்தனை செய்வார்கள்; நல்லது நினைந்தாய் - நல்ல செயலையே செய்யக் கருதினாய்; வீரராய் வசையின் தீர்ந்தார் - வீரராய்க் குற்றம் அற்றவர்; நேரே வந்தனை புரிவர் அன்றே - உனக்கு நேராக வந்து வணக்கம் செய்வார்கள் அல்லவா,
உன் தந்தையைக் கொன்று உனக்குத் துன்பம் தந்தவனுக்காகப் பந்தனைப் பகையைச் செற்றுக் காட்டினால் வீரராய் உள்ளோர் உன்னை அவமதிப்பர் பாரோர் நிந்திப்பர். அதனால் உன் செயல் நன்றன்று என்றவாறு. வஞ்சப் புகழ்ச்சி அணி. உந்தை-மரூஉ பந்தனைப் பகை-கட்டாக உள்ள பகை. நிந்தனை-பழிச்சொல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “He who hid and took your father's life with a single arrow, your benefactor—
- if you do not destroy his binding enemies and show him, the people of the earth
- will heap blame on you. A fine thought you have had! Surely
- heroes free from all reproach will come and pay you homage face to face.”
What the poem says
Kumpakaruṇaṉ answers with biting sarcasm. Irāmaṉ hid and killed Aṅkataṉ's father with one arrow, and now Aṅkataṉ is fighting for him. What a "benefactor"! If Aṅkataṉ fails to destroy Irāmaṉ's enemies, the world will blame him. And real heroes will surely come and bow to him for his loyalty.
This is mock praise. Kumpakaruṇaṉ means that the world will despise Aṅkataṉ for serving his father's killer.