கம்பராமாயணம் 7509 · யுத்த 15.196

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தண்டு இறத் தடக்கை ஓச்சித்தழுவி, ‘அத் தறுகணானைக்
கொண்டு இறப்புறுவன் ‘என்னாத்தலையுறக் குதிக்குங் காலைப்
புண்திறப்புற வலாளன்கையினால் புகைந்து குத்த,
மண்திறப்பு எய்த வீழ்ந்தான்;மாருதி இமைப்பின் வந்தான்.

பொருள் · Meaning in Tamil

தண்டு இற - தண்டாயுதம் முறிந்தவுடன்; தடக்கை ஓச்சி - தன் பெரிய கைகளைச் செலுத்தி, அத்தறுகணானை - அந்த வலிய கும்பகருணனை; தழுவிக்கொண்டு இறப்புறுவென் - பற்றிக் கொண்டு இறப்பு உறச் செய்வேன்; என்னா - என்று எண்ணி; தலையுறக் குனிக்குங் காலை - தலைப்பகுதி கீழ் உறக் குனிந்தபோது; வலாளன் - வலிமையுடைய கும்பகருணன்; புண்திறப்புற - அங்கதன் உடம்பில் புண் பல பிளந்து தோன்றுமாறு; கையினால் புகைந்து குத்த - கையினால் சினந்து குத்த; மண் திறப்பு எய்த வீழ்ந்தான் - அவன் நிலம் பிளவு படும்படி வீழ்ந்தான்; மாருதி இமைப்பின் வந்தான் - அனுமன் நொடிப் பொழுதுக்குள் அங்கு வந்தான்.

தண்டு இற, ஓச்சி கொண்டு இறப்புறுவன் என்னா குனிக்குங்காலை வலாளன் புகைந்து குத்த வீழ்ந்தான் என்க. தறுகணான்-வினையால் அணையும் பெயர் கணான்-இடைக்குறை. இறப்புறுவான் - இறப்பு உறச் செய்வேன், வலாளன்- வல்லவன் ஆகிய கும்பகருணன், மண்திறப்பு எய்தல்-பூமி பிளத்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the mace broke, he stretched out his great arms to grapple that fierce one,
  2. thinking “I will seize him and bring him to his death,” and as he bent his head low,
  3. the mighty one, fuming, punched him with his fist so that wounds burst open,
  4. and he fell so that the earth split; and Māruti came in the blink of an eye.

What the poem says

With the mace broken, Aṅkataṉ reaches out to wrestle Kumpakaruṇaṉ to death. As he lowers his head to charge, Kumpakaruṇaṉ punches him so hard that his body splits open with wounds. He falls, and the ground cracks beneath him.

Instantly Aṉumaṉ, son of the Wind and here called Māruti, arrives.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṇṭu iṟat taṭak kai ōccit taḻuvi, ‘at taṟukaṇāṉaik
koṇṭu iṟappuṟuvaṉ ‘eṉṉāt talaiyuṟak kuṉikkuṅ kālai
puṇ tiṟappuṟa valāḷaṉ kaiyiṉāl pukaintu kutta,
maṇ tiṟappu eyta vīḻntāṉ; māruti imaippiṉ vantāṉ.