கம்பராமாயணம் 7514 · யுத்த 15.201

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாற்றம் அது உரைப்பக் கேளா- அனுமன் கூறிய அச்சொற்களைக் கேட்டு; மலை முழை திறந்தது என்ன - மலைக் குகையைத் திறந்தது போல; கூற்று உறழ்பகுவாய் விள்ளநகைத்து - கூற்றுவனோடு மாறுபட்ட பெரியவாயைத் திறந்து சிரித்து; நீ கொணர்ந்த குன்றை - நீ கொண்டு வந்த பெருமலையை; ஏற்றனென் - ஏற்றவனாய்; ஏற்ற காலத்து - அவ்வாறு ஏற்ற காலத்தில்; இறை அதற்கு ஒற்கம் எய்தின் - சிறிதளவாவது அதற்குத் தளர்ச்சி அடைந்தால்; உனக்கு தோற்றனென் - உனக்குத் தோற்றவன் ஆவேன்; என் வன்மை சுருங்கும் - என் வலிமை உன் வலிமைக்குத் தாழ்ந்தது ஆகும்; என்று அரக்கன் சொன்னான் - என்று கும்பகருணன் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Hearing him say these words, he laughed, his cavernous mouth, a match for Death's,
  2. opening like the mouth of a mountain cave: “The hill you have brought
  3. I will take; and if, when I take it, I flinch from it in the least,
  4. I am beaten by you, and my strength is lessened,” said the demon.

What the poem says

Kumpakaruṇaṉ laughs, his huge mouth gaping like a mountain cave and as terrible as Death's. He accepts the challenge. He will take the mountain on his body, and if he flinches even slightly, he will admit that Aṉumaṉ has beaten him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṟṟam aḵtu uraippak kēḷā, malai muḻai tiṟantatu eṉṉak
kūṟṟu uṟaḻ pakuvāy viḷḷa nakaittu, ‘nī koṇarnta kuṉṟai
ēṟṟaṉeṉ; ēṟṟa kālattu, iṟai ataṟku oṟkam eytiṉ,
tōṟṟaṉeṉ, uṉakku; eṉ vaṉmai curuṅkum ‘eṉṟu arakkaṉ coṉṉāṉ