கம்பராமாயணம் 7515 · யுத்த 15.202

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாருதி- அனுமன்; அடா! - அடா!; வல்லை ஆகின் நில் - வல்லமை உடையவனாயின் நில்; மாட்டாய் ஆகின் - மாட்டாய் ஆகின்; உயிர் கொண்டு பேருதி - உயிரைக் கொண்டு அப்பால் போ; என்று - என்று சொல்லி; பெருங்கையால் நெருங்க விட்ட - தன் பெரிய கைகளினால் அவனை நெருங்குமாறு வீசிய; கார் உதிர் வயிரக் குன்றை - மேகங்கள் உதிர்வதற்குக் காரணம் ஆன வலிய மலையை; காத்திலன் - தடுத்துக் காத்திலனாய்த்; தோள் மேல் ஏற்றான் - தன் தோளின் மீது ஏற்றுக் கொண்டான்; எவ் உலகும் உட்க - எல்லா உலகமும் அஞ்சுமாறு; ஓர் உதிர் நூறு கூறாய் உக்கது - அது ஒருமுறை உதிர்கையிலே நூறு பகுதியாகச் சிந்திச் சிதறி விட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Māruti cried, “If you are able, stand, fellow! If you cannot,
  2. run off with your life!” and the massive hill that scattered the clouds,
  3. which he flung at close range with his great hands, the giant did not ward off,
  4. but took on his shoulder; at one blow it fell into a hundred pieces, and all the worlds shook.

What the poem says

Aṉumaṉ shouts at Kumpakaruṇaṉ to stand firm if he can, or else run for his life. He hurls the mountain, which is so tall that it scatters the clouds. Kumpakaruṇaṉ makes no attempt to block it and takes it on his shoulder. It breaks into a hundred pieces, and every world trembles.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māruti, ‘vallaiākiṉ, nil, aṭā! māṭṭāy ākiṉ,
pēruti, uyirkoṇṭu ‘eṉṟu peruṅ kaiyāl neruṅka viṭṭa
kār utir vayirak kuṉṟaik kāttilaṉ, tōḷmēl ēṟṟāṉ;
ōr utir nūṟu kūṟāy ukkatu, ev ulakum uṭka.