கம்பராமாயணம் 7518 · யுத்த 15.205

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தாக்கினார், தாக்கினார் தம்கைத்தலம் சலித்தது அன்றி,
நூக்கினார் ஒருவர் இல்லை;நோவு செய்தாரும் இல்லை
ஆக்கினான்; களத்தின் ஆங்குஓர் குரங்கினது அடியும் இன்றிப்
போக்கினான், ஆண்மையாலே;புதுக்கினான் புகழை அம்மா.

பொருள் · Meaning in Tamil

தாக்கினார் - கும்பகருணனைக் குரங்குப் படைவீரர் தாக்கினார். தாக்கினார் தம் - அவ்வாறு தாக்கியவர்களுடைய; கைத்தலம் சலித்தது அன்றி -கைத்தலம் சலித்ததே அல்லாமல்; நூக்கினார் இல்லை - அவனை அசைத்துத் தள்ளியவர் எவரும் இல்லை; ஒன்றும் நோவு செய்தாரும் இல்லை - எந்த வகையிலும் நோவு செய்தவர்களும் இல்லை; களத்தின் ஆங்கு ஓர் குரங்கினது அடியும் இன்றி - போர்க் களத்தில் ஒரு குரங்கினது அடிச்சுவடும் இன்றி; ஆக்கினான் போக்கினான்- போரைச் செய்தவன் ஆன கும்பகருணன் அழித்தான்; ஆண்மையாலே புதுக்கினான் புகழை - தன்னுடைய ஆண்மையால் புகழைப் புதுப்பித்தான்.

புதுக்கினான்- புதுப்பித்தான். அம்மா-வியப்பிடைச் சொல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They attacked; but beyond wearing out the hands of those who attacked,
  2. none moved him; not one did him any hurt;
  3. he swept the field so that not a single monkey's footprint was left there,
  4. by his valour; he made his fame new again. Oh!

What the poem says

The monkeys attack again and again but only wear out their own hands. None of them can move Kumpakaruṇaṉ or hurt him. He clears the battlefield until not a single monkey's footprint remains. By his valour he renews his old fame.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tākkiṉār, tākkiṉārtam kaittalam calittatu aṉṟi,
nūkkiṉār illai; oṉṟum nōvu ceytārum illai
ākkiṉāṉ; kaḷattiṉ āṅku ōr kuraṅkiṉatu aṭiyum iṉṟip
pōkkiṉāṉ, āṇmaiyālē; putukkiṉāṉ pukaḻai ammā.