கம்பராமாயணம் 7520 · யுத்த 15.207

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பறந்தலை தன்னில் வந்தபல பெருங் கவியின் பண்ணை
இறந்தது கிடக்க, நின்றஇரிதலின் யாரும் இன்றி
வறந்தது; சோரி பாயவளர்ந்தது, மகர வேலை
குறைந்தது, உவாவுற்று ஓதம்கிளர்ந்து மீக்கொண்டது என்ன.

பொருள் · Meaning in Tamil

பறந்தலை அதனின் வந்த - போர்க்களமாகிய அதன் இடத்து வந்த; பல்பெருங் கவியின் பண்ணை - பலவாகிய பெரிய குரங்கினது கூட்டம்; இறந்தது கிடக்க - இறந்தது போக; நின்ற இரிதலின் - நின்ற குரங்குகள் நிலைகெட்டு ஓடியதால், யாரும் இன்றி வறந்தது - எவரும் இல்லாமல் வறியது ஆயிற்று; குறைந்துளது மகர வேலை - குறைந்துள்ளதான மகர மீன்களை உடைய கடல்; உவாவுற்று ஓதம் கிளர்ந்து மீக்கொண்டது என்ன - முழுமதி நாளில் வெள்ளப் பெருக்கு மேல் பொங்குவது ஒப்ப; சோரி பாய வளர்ந்தது - இரத்தம் பாய்ந்ததனால் மிக்கு வளர்ந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Of the great hosts of monkeys that had come to the battlefield,
  2. leaving aside those that died, those still standing fled, so the field lay empty,
  3. with no one left; and the sea full of sharks, which had sunk low,
  4. swelled as the blood poured into it, as if the full-moon tide had risen and overflowed.

What the poem says

The battlefield is now empty of monkeys. Those not killed have fled. So much blood pours into the ocean that its level rises, like the high tide on the night of the full moon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṟantalaiataṉiṉ vanta pala peruṅ kaviyiṉ paṇṇai
iṟantatu kiṭakka, niṉṟa iritaliṉ yārum iṉṟi
vaṟantatu; cōri pāya vaḷarntatu, makara vēlai
kuṟaintuḷatu, uvāvuṟṟu ōtam kiḷarntu mīkkoṇṭatu eṉṉa.