கம்பராமாயணம் 7522 · யுத்த 15.209
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சிலையினை நாண் எறிந்தனன் - இலக்குவன் தன் வில்லின் நாணைத் தெறித்தான்; அரக்கியர் நகுபொன் பூண் எறிந்தனர் -அவ்வொலி கேட்டு அரக்கர் இறந்தமையால் இறந்தவர்களுடைய மனைவியர் பொற்றாலியைக் கழற்றி எறிந்தனர்: படியிடை இடி பொடித்தென்ன - நிலத்தில் இடி உண்டானாற் போல; சேண் எறிந்து எழுதிசை செவிடு எறிந்தன - வெகுதூரம் வரை தோன்றும் திக்குகள் ஓசையால் செவிடு பட்டன; அலகை தூண் எறிந்தன கை எடுத்து - பேய்கள் தூண்களை அடித்து வைத்தாற் போன்ற கைகளை உயரத் தூக்கி; துணங்கை ஆடின -துணங்கைக் கூத்தாடின.
துணங்கை-முடக்கிய இரு கைகளையும் விலாப்புறத்தில் ஒற்றியடித்துக்கொண்டு அசைந்தாடும் ஒரு வகைக்கூத்து. "பழுப்புடை இருகை முடக்கி அடிக்கத் துடக்கிய நடையது துணங்கை ஆகும்” என்னும் நூற்பாவால் அறிக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He twanged the string of his bow; the demon women cast off
- their gleaming golden ornaments on the ground; like a thunderclap,
- it rang far, and the seven directions were deafened; the ghouls
- raised their pillar-like arms and danced the tuṇaṅkai.
What the poem says
Ilakkuvaṉ plucks his bowstring, and the sound crashes like thunder and deafens every direction. It brings death to so many demons that their wives throw off their golden marriage ornaments in mourning. The ghouls raise their pillar-like arms and dance the tuṇaṅkai, a dance performed by beating bent arms against the sides.