கம்பராமாயணம் 7526 · யுத்த 15.213

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மின் புகுந்தன பல்குழுவாம்என மிளிர்வ,
பொன் புகுந்து ஒளிர் வடிம்பினகடுங்கணை போவ,
முன்பு நின்றவர் முகத்திற்கும்,கடைக்குழை முதுகின்
பின்பு நின்றவர் மிடற்றிற்கும்,விசை ஒக்கும், பிறழா.

பொருள் · Meaning in Tamil

பல் குழுவாம் மின் புகுந்தன என - பல கூட்டங்களாக மின்னல்கள் புகுந்தன போன்று; மிளிர்வ- கருதும்படி விளங்குவனவும்; பொன் புகுந்து ஒளிர் வடிம்பின - பொன் போல் விளங்கி ஒளிர்கின்ற விளிம்புகளையுடையவையும் ஆன; கருங்கணை போவ - கொடிய கணைகள் விரைந்து போவனவாய்; முன்பு நின்றவர் முகத்திற்கும் - தார்ப் படையில் நின்றவர் உடைய முகத்துக்கும்; கடைக்குழை முதுகின் பின்பு நின்றவர் பிடர்க்கும் - கடைப்படையான கூழையின் பின்புறமான இடத்து நிற்பவர் பிடரியிலும்; இவ்விசை பிறழா ஒக்கும் - இந்த வேகத்தில் மாறுபடாமல் ஒத்து அமையும்.

செல்லச் செல்ல வேகம் குறையாது ஒரு படித்தான வேகம் இறுதி வரை உடையது இலக்குவன் அம்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Flashing like many swarms of lightning darting in,
  2. the fierce arrows with gold-gleaming edges went on,
  3. and for the faces of those who stood in front, and for the napes
  4. of those who stood behind at the rear of the column, their speed was the same, unchanged.

What the poem says

Ilakkuvaṉ's gold-edged arrows flash like swarms of lightning. They travel the whole depth of the demon army without slowing down. They hit the faces of the front-line soldiers and the necks of those at the very rear with exactly the same force.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1miṉ pukuntaṉa pal kuḻuvām eṉa miḷirva,
poṉ pukuntu oḷir vaṭimpiṉa kaṭuṅ kaṇai pōva,
muṉpu niṉṟavar mukattiṟkum, kaṭaik kuḻai mutukiṉ
piṉpu niṉṟavar piṭarkkum, iv vicai okkum, piṟaḻā.