கம்பராமாயணம் 753 · பால 12.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கார்முக வலியை - இந்த வில்லின் வலிமையை; யான் கழறல் வேண்டுமோ - நான் எடுத்துக் கூற வேண்டுமோ?; வார் சடை அரன் - நீண்ட சடைமுடியுடைய சிவபிரானை; நிகர்வரத - ஒத்த முனிவனே! நீ அலால் - உன்னையல்லாமல்; அறிபவர் - (இதன் வலிமையை) உண்மையாக அறியக் கூடியவர்; யார் உளர் - யார் இருக்கின்றார் (யாருமில்லை); இவற்கு - இந்தச் சனகராசனுக்கு; தோன்றிய - (மகளாகப்) பிறந்த; தேர்முக அல்குலாள் - தேர்த்தட்டுப் போன்ற அல்குலையுடைய சீதையின்; செவ்வி - வரலாற்றை; கேள் - கேட்பாயாக; எனா - என்று சொல்லி.
கார்முக வலியை நான் சொல்ல வேண்டுவதில்லை. ஏனெனில், அதை அறுபதினாயிரம் பேர் சுமந்து வந்ததை நீரே நேரில் கண்டதால் அதன் வலிமை உமக்குத் தெரியும். வில்லை அளித்த சிவபெருமான் அனைய நீயே அவ்வில்லை வளைப்பிக்கவும், சானகியின் திருமணத்தை நிறைவேற்றி வைக்கவும் அருள் புரியவேண்டும் என்பது, “வார்சடை அரன் நிகர் வரத” என்ற விளியால் உணர்த்தப் பெறுகிறது - கருத்துடையடை கொளியணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Must I tell you of the strength of this bow?
- Giver of boons, equal to Araṉ of the long matted locks, who but you
- could truly know it? Of the one born to this king,
- whose hips are broad as a chariot's floor, hear the story,' he said.
What the poem says
Catāṉantaṉ turns to Vicuvāmittiraṉ. There is no need to describe the bow's might; the sage has seen sixty thousand men carry it in. Instead he will tell the story of Cītai, the king's daughter.
Addressing Vicuvāmittiraṉ as one equal to Civaṉ, the god who gave the bow, carries a hidden request: let the sage, like Civaṉ, see to it that the bow is bent and the girl's marriage achieved.