கம்பராமாயணம் 7530 · யுத்த 15.217

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பல்லவப் படை பட, படுபுரவிய, பல்கால்
வில்லுடைத் தலையாளொடுசூதரை வீழ்த்த,
எல்லை அற்ற செங்குருதியின்ஈர்ப்புண்ட அல்லால்,
செல்லகிற்றில, நின்றிலகொடி நெடுந் தேர்கள்.

பொருள் · Meaning in Tamil

கொடி நெடுந்தேர்கள் - கொடி கட்டப்பட்ட பெரிய தேர்கள்; பல்லவக் கணைபட - இலக்குவன் விடுத்த இளந்தளிர் போன்ற சிவப்பு நிறமான அம்புகள் பாய்ந்ததனால்; படு புரவிய - இறந்த குதிரைகளையுடையனவாயின; பல்கால் வில்லுடைத் தலையாளொடு -பல இடங்களில் தேரில் இருந்து போர் செய்யும் தேர் வீரரோடு; சூதரை வீழ்த்த - அவை தேர்ப்பாகரையும் கொன்றழித்தன; செல்லகிற்றில - அதனால் அத்தேர்கள் ஓடிச் செல்ல மாட்டா ஆயின; எல்லை அற்ற செங்குருதியின் ஈர்ப்புண்ட அல்லால் - ஆயினும் தேர்கள் போர்க்களத்து ஓடிய குருதி வெள்ளத்தில் இழுத்துச் செல்லப் பட்டன அல்லாமல்; நின்றில - ஓர் இடத்து நிற்க மாட்டா ஆயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the leaf-bladed arrows struck, their horses were killed, and many times over
  2. the arrows felled the bowmen who fought from them, along with the charioteers;
  3. except as they were dragged along by the boundless red blood,
  4. the tall bannered chariots could not move, and yet could not stand still.

What the poem says

Ilakkuvaṉ's leaf-shaped arrows kill the chariot horses, the archers riding in the chariots and the drivers. The tall bannered chariots can no longer move under their own power. They cannot stay still either, because the flood of blood sweeps them along.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pallavak kaṇai paṭa, paṭu puraviya, pal kāl
villuṭait talaiyāḷoṭu cūtarai vīḻtta,
ellai aṟṟa ceṅ kurutiyiṉ īrppuṇṭa allāl,
cellakiṟṟila, niṉṟila koṭi neṭun tērkaḷ.