கம்பராமாயணம் 7533 · யுத்த 15.220
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எரிந்த வெங்கணை நெற்றியில் படுதொறும் - இலக்குவனது எரியும் தன்மையுள்ள கொடிய கணைகள் நெற்றியில் படுந்தோறும்; யானை - யானைகள்; அரிந்த அங்குசத்து - கூர்மையாக அரியப்பட்ட அங்குசத்தை; அங்கையின் - கொண்ட அழகிய கைகளோடு, கல்வியின் அமைவால் - பாகன் கற்றுத் தந்த போர்க் கல்வியின் தன்மையால்; திரிந்த வேகத்த - திரிந்த வேகத்தையுடையனவாய், பாகர்கள் தீர்ந்தன - செலுத்துகின்ற பாகர்களையும் இழந்தனவாய்; புயலின் - புயல் போல; செருவில் புரிந்த வானரத் தானையில் புக்கன - போர்க்களத்தில் விருப்பம் கொண்ட வானரப் படையின் இடையில் புகுந்தன.
இலக்குவன் அம்புகள் நெற்றியில் பட்ட யானைகள் பாகரையிழந்தும் அவர்கள் கற்பித்த போர்த் தொழிற் கல்வியால் வானரப் படையின் இடையில் புயல் போலப் புக்கன. பாகர்கள் அங்குசத்தால் குத்திச் செலுத்துவர். பாகர் இல்லாத யானைகள் இலக்குவன் அம்பு பட்டவுடன் அங்குசத்தால் குத்தப்படுவதாக நினைத்துத் தாமே போர்ச் செயலில் ஈடுபட்டன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Each time the blazing arrows struck their foreheads, the elephants,
- by the training of the hands that held the sharp goads,
- wheeled with speed, though their mahouts were gone, and in the battle
- charged like storms into the monkey army eager for the fight.
What the poem says
Ilakkuvaṉ's blazing arrows strike the war elephants on their foreheads. Their riders are dead, but the elephants feel the arrows as if they were the familiar jab of the goad. Following their training, they charge like storms into the monkey army.