கம்பராமாயணம் 7536 · யுத்த 15.223
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இரக்கம் நீங்கினர் -அரக்கர்கள் இரக்கம் நீங்கியவர்களாய், அறத்தொடும் திறம்பினர் எனினும் - அறநெறி தவறியவர்கள் என்றாலும்; அரக்கர் ஆக்கையை - அரக்கர்களின் உடம்பினை: அரம்பையர் விரும்பித் தழுவினர் - அமர மகளிர் விரும்பித் தழுவினார்கள் இதனால்; மெய்யுணர்வு இருவினைகளைத் துரக்கும் எனும் சொல்லின் - தத்துவ ஞானம் இருவினைகளையும் நீக்கும் என்னும் சொல்லைப் பிரமாணத்தால் கண்டது போல; வீரதை தீமையைக் கரக்கும் எனும் இது கண்டோம்- வீரப் பண்பானது பாவத்தைப் போக்கும் என்பதையும் கண்டோம்.
ஞானம் இருவினைகளை நீக்குதல் போல வீரம் பாவத்தை நீக்கியதை இரக்கமில் அரக்கர் உடம்பை அரம்பையர் தழுவியது கொண்டு உணர்க. வீரதை, வீரம் மெய்யுணர்வு இருவினைகளை ஒழித்தல் உரை அளவை (ஆப்தவாக்கியப் பிரமாணம்) வீரப் பண்பு பாவத்தைப் போக்கும் என்பது காட்சி அளவை (பிரத்தியட்சப் பிரமாணம்) என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As with the saying that true knowledge drives away both kinds of deeds,
- we have seen this too: that valour wipes out evil;
- for though they were without pity and had turned from righteousness,
- the celestial nymphs embraced the demons' bodies with longing.
What the poem says
The poet reflects on the demons' deaths. Scripture teaches that true knowledge destroys karma, both good and bad. The battlefield shows another truth: valour wipes away sin. The demons were pitiless and had abandoned righteousness, yet because they died bravely, the heavenly nymphs gladly embrace them.
What we know about knowledge comes from scripture. What we see about valour, we see with our own eyes.