கம்பராமாயணம் 7537 · யுத்த 15.224

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மறக் கொடுந்தொழில் அரக்கர்கள் - பாவத்தோடு சேர்ந்த கொடுமையான தொழிலைச் செய்யும் அரக்கர்கள்; மறுக்கலா மழை போல் - விலக்க முடியாத மழையைப் போல; நெருப்பொடு நிகர்வன - நெருப்பைப் போன்ற; நிறக்கொடுங்கணை - இலக்குவனுடைய கொடிய அம்புகள்; நிமிர - உயர்ந்து ஓங்கிப் பட்டதனால்; இறக்கம் எய்தினர் யாவரும் - இறந்தவர்கள் யாவரும்; துறக்கம் எய்தினர் எனின் - வீரசுவர்க்கம் அடைந்தார்கள் என்றால்; அத்துறக்கம் என்பதின் பெரியது ஒன்று உளது எனச் சொல்லேம் - அச்சுவர்க்கத்தைக் காட்டிலும் பெரிய உலகம் வேறு ஒன்று உண்டு என்று சொல்லத்துணியோம்.

துறக்கம் ஈரிடத்தும் கூட்டுக. பாவம் செய்தவர்களுக்கும் வீர சுவர்க்க இன்பத்தைத் தருதலால் அச்சுவர்க்கத்திலும் பெருமை பெற்றது வேறு உண்டு என்று கூற முடியாது என்றார். இவ்வளவு அரக்கர்களும் வீரசுவர்க்கம் பெற்றார்கள். எனின் அந்த சுவர்க்கம் பெரிய உலகமாக இருக்க வேண்டும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The demons of cruel and warlike deeds,
  2. as the fierce, fire-like arrows rose like a rain that cannot be stopped,
  3. all met their death; and if all of them reached heaven, then
  4. we will not say there is anything greater than that heaven.

What the poem says

Ilakkuvaṉ's fiery arrows pour down like unstoppable rain, and countless cruel demons die. If all of them went to the heroes' heaven, the poet says, then that heaven must be the greatest of all worlds. It is generous enough to welcome even sinners who died bravely, and big enough to hold so many.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟak koṭun toḻil arakkarkaḷ, maṟukkilā maḻaipōl
niṟak koṭuṅ kaṇai neruppoṭu nikarvaṉa nimira,
iṟakkam eytiṉar yāvarum, eytiṉar eṉiṉ, at
tuṟakkam eṉpatiṉ periyatu oṉṟu uḷatu eṉac collēm.