கம்பராமாயணம் 7539 · யுத்த 15.226
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சரங்கள் - இலக்குவன் அம்புகள்; சிலவரைக் கரம் - சிலரது கைகளையும்; சிலவரைச் செவி - சிலரது காதுகளையும்; சிலர்நாசி - சிலரது மூக்கையும்; சிலவரைக் கண் - சிலரது கண்; கொளும் செயலால் - கொள்ளுகின்ற தன்மையால்; நிலவரை - நிலத்தில்; தரு பொருள் வழி - கொடுக்கின்ற பொருளுக்கேற்ப; தண் தமிழ் நிரப்பும் - தண் தமிழ்ச் செய்யுளைப் பாடுகின்ற; புலவர் சொல் துறை புரிந்தவும் போன்றன - புலவர்களின் சொல் துறையை விரும்பியவற்றை ஒத்திருந்தன.
செல்வர் இடத்துப் பொன் பெற்றுத் தமிழ் பாடும் புலவர் அவர் தந்த பொருளுக்கு ஏற்பப் பாடி நிரப்பும் தன்மை போல இலக்குவன் அம்புகள் கிடைத்த அளவுக்கு ஏற்பத் தமக்குரிய அறுத்தல் தொழிலைச் செய்தன என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- From some they took hands, from some ears, from some noses,
- from some feet, from some eyes; and by this way of taking,
- the arrows were like poets on this earth who fill out their cool Tamil verses
- according to the gifts they are given, following the poet's craft.
What the poem says
The poet uses an image from his own trade. The arrows take a hand from one demon, an ear from another, a nose, a foot or an eye from others. They are like Tamil poets who write a patron's praise in proportion to the gifts they receive. The arrows take from each enemy whatever he offers them.