கம்பராமாயணம் 7540 · யுத்த 15.227
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அறத்தின் இன் உயிர் அனையவன் - அறத்திற்கு இனிய உயிரை ஒத்தவனாகிய இலக்குவனது; கணைபட - அம்புகள் படுவதால், அரக்கர் - அரக்கர்கள்; இங்கு இறை நிற்பின் இறத்தும் என்று -இங்கு ஒரு நொடிப்பொழுது நிற்பினும் இறந்து விடுவோம் என்று; மயங்கி - நிலை கெட்டு; ஓடின குருதியே போல - களத்தில் ஓடிய இரத்த வெள்ளம் போல; திறத்திறம் பட- கூட்டம் கூட்டமாக; திசை தொறும் திசை தொறும் - நாலா திசைகளிலும்; இரியலின் சிந்திப் புறத்தின் ஓடினர்- ஓடிச் சிதறுண்டு வெளியே ஓடலாயினர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the arrows of him who is like the sweet life of righteousness struck, the demons,
- “We shall die if we stay here a moment,” fled in confusion,
- and scattered band by band toward every quarter,
- and ran off the field, just as the blood was running.
What the poem says
Ilakkuvaṉ is as dear to righteousness as its own life. Under his arrows the demons panic, sure that they will die if they stay a moment longer. They break into groups and scatter in every direction, running off the field like the streams of blood flowing around them.