கம்பராமாயணம் 7543 · யுத்த 15.230
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வளை கொள் வெள் எயிற்று அரக்கன் - வளைதலைக் கொண்ட வெள்ளிய பற்களை உடைய கும்பகருணன்; தொளை கொள்வான் நுகச் சுடர் நெடுந்தேர் மிசைத் தோன்றி - தொளையில் பூட்டப்பட்ட பெரிய நுகத்தடியை உடைய ஒளி பொருந்திய பெரிய தேரில் ஏறி; வெஞ்செருத் தொழில் மலைய - கொடிய போர்த்தொழில் செய்கையில்; இகல்கிளை கொளாது - தரையில் இருந்து இலக்குவன் செய்யும் போர் மேம்பாடு அடையாது; என்று எண்ணி - என்று கருதி; மாருதி கிடைத்தான் - அனுமன் இலக்குவனை நெருங்கி; இளைய வள்ளலே - இளைய பெருமானே; தோள் மிசை ஏறுதி என்றான் - என் தோள் மீது ஏறிக் கொள்க என்றான்.
முதற்போர் புரி படலத்தில் இராவணன் தேரில் வர இராமனை அனுமன் தன் தோள் மேல் ஏறும்படிக் கேட்டுக் கொள்ளும் சமயத்தில் "சீரில் செல்கின்றது இல்லை இச்செரு (7232) என்பதை இதனுடன் ஒப்பிடுக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the demon with curved white fangs appeared on his tall, gleaming chariot
- with its bored and fitted yoke, and pressed the cruel work of war,
- Māruti thought, “The fight will not prosper this way,” and came up close:
- “Young lord, generous one, climb up onto my shoulders,” he said.
What the poem says
Kumpakaruṇaṉ fights from his towering chariot. Aṉumaṉ sees that Ilakkuvaṉ, on foot, is at a disadvantage, so he offers to carry Ilakkuvaṉ on his shoulders. Earlier in the war he made the same offer to Irāmaṉ when Irāvaṇaṉ came out in his chariot.