கம்பராமாயணம் 7544 · யுத்த 15.231
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஏறினான், இளங் கோளரி;இமையவர் ஆசி
கூறினார்; எடுத்து ஆர்த்ததுவானரக் குழுவும்;
நூறு பத்துடைப் பத்தியின்நொறில் பரி பூண்ட
ஆறு தேரினும் அகன்றது,அனுமன்தன் தடந் தோள்.
பொருள் · Meaning in Tamil
இளங்கோளரி ஏறினான் - அனுமன் தோளில் இளஞ்சிங்கம் போன்ற இலக்குவன் ஏறினான்; இமையவர் ஆசி கூறினார் - இமையவர்கள் ஆசி கூறினார்கள்; வானரக் குழுவும் எடுத்து ஆர்த்தது - குரங்குக் கூட்டங்களும் பெருங் குரல் எடுத்து ஆரவாரம் செய்தன; நூறு பத்துடை - ஆயிரம்; பத்தியின் நொறில் பரிபூண்ட - வரிசையாக விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டப்பெற்ற; ஆறு தேரினும் - கும்பகருணனது ஆறு தேர்களைக் காட்டிலும்; அவ் அனுமன் தன் தடந்தோள் அகன்றது - அந்த அனுமனது பெரிய தோள்கள் அகன்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The young lion climbed up; the gods called out their blessings;
- the monkey host too raised a roar;
- and broader than six chariots yoked with swift horses
- in rows of a thousand was that Aṉumaṉ's mighty shoulder.
What the poem says
Ilakkuvaṉ, a young lion, climbs onto Aṉumaṉ's shoulders. The gods bless him and the monkeys cheer. Aṉumaṉ's shoulders are wider than six of Kumpakaruṇaṉ's chariots, each drawn by a thousand fast horses.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēṟiṉāṉ, iḷaṅ kōḷari; imaiyavar āci
kūṟiṉār; eṭuttu ārttatu vāṉarak kuḻuvum;
nūṟu pattuṭaip pattiyiṉ noṟil pari pūṇṭa
āṟu tēriṉum akaṉṟatu, av aṉumaṉtaṉ taṭan tōḷ.