கம்பராமாயணம் 7548 · யுத்த 15.235

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பெய்தவத்தினோர் பெண் கொடி - எங்களிடம் தங்கிய நல்வினைத் தவத்தால் ஒப்பற்ற கொடி போன்ற பெண் ஒருத்தி; எம்முடன் பிறந்தாள் - எங்களுடன் பிறந்தாள்; செய்த குற்றம் ஒன்று இல் - அவள் செய்த குற்றம் ஒன்றும் இல்லை; அவள் நாசி வெஞ்சினத்தால் கொய்த கொற்றவ - அவ்வாறு இருப்பினும் அவளது மூக்கைக் கொடிய சீற்றத்தால் அரிந்த வெற்றிக்குரியவனே; மற்று அவள் கூந்தல் தொட்டு ஈர்த்த - அவளது கூந்தலைத் தொட்டு இழுத்த; கை தலத்திடைக் கிடத்துவென் - கையை நிலத்தில் விழச் செய்யப் போகிறேன்; காக்குதி என்றான் - காத்துக்கொள் என்றான் கும்பகருணன்.

இலக்குவனைப் பார்த்தவுடன் அவன் தன் தங்கைக்குச் செய்த கொடுமை நினைவுக்கு வரலால் அதையே கூறினான் என்க. உரிமையற்ற ஆடவர் பெண்டிர் கூந்தல் பற்றி இழுத்தமை இழிசெயல் என்றவாறு. கொற்றவ-இகழ்ச்சிக் குறிப்பு. சூர்ப்பனகையின் காமம் அரக்கர்க்கு இயல்பு ஆதலின் 'செய்த குற்றம் ஒன்று இல்' என்றானாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “A vine-like girl, born of our store of merit, born with us,
  2. who had done no wrong at all—you, mighty one, in fierce anger
  3. cut off her nose; and the hand that seized her hair and dragged her
  4. I will lay low on the ground. Guard it!” he said.

What the poem says

Kumpakaruṇaṉ's vow concerns his sister Cūrppaṇakai, whose nose Ilakkuvaṉ cut off in the forest. He insists that she did no wrong, since desire is simply in a demon's nature. He calls Ilakkuvaṉ "mighty one" with scorn, because a man had seized a woman by the hair. He swears to cut off the hand that did it and dares Ilakkuvaṉ to protect it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘pey tavattiṉōr peṇkoṭi, emmuṭaṉ piṟantāḷ,
ceyta kuṟṟam oṉṟu illavaḷ, nāci veñ ciṉattāl
koyta koṟṟava! maṟṟu avaḷ kūntal toṭṭu īrtta
kai talattiṭaik kiṭattuveṉ; kākkuti ‘eṉṟāṉ.