கம்பராமாயணம் 7551 · யுத்த 15.238
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெம்பு வெஞ்சினத்து இராவணற்கு இளையவன் -வெம்புகிற கொடிய சினத்தை உடைய இராவணனது தம்பி; விட்ட - செலுத்திய; கொம்பு நாலுடைக் குலக் கரிக்கும்பத்தில் குளித்த - நான்கு தந்தங்களை உடைய ஐராவதம் என்னும் யானையின் மத்தகத்தில் பாய்ந்தனவும்; உம்பர் ஆற்றலை ஒதுக்கிய - தேவர்களின் வலிமையைப் போக்கியனவும், உரும் எனச் செல்வ - இடிபோல் செல்வனவும் ஆகிய; அம்பு பத்தினோடு எட்டையும் - பதினெட்டு அம்புகளையும்; நான்கினால் அறுத்தான் - இலக்குவன் நான்கு அம்புகளினால் தடுத்து அறுத்திட்டான்.
கும்பகருணன் விடுத்த பதினெட்டு அம்புகளை இலக்குவன் நான்கு அம்புகளால் அழித்தான் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Arrows that had plunged into the brow of the noble four-tusked elephant,
- that had swept aside the might of the gods, that flew like thunderbolts—
- the ten and eight that the younger brother of Irāvaṇaṉ, burning with fierce rage, had loosed,
- Ilakkuvaṉ cut down with four.
What the poem says
Kumpakaruṇaṉ's arrows have a fearsome record. They once sank into the forehead of Airāvatam, Indra's four-tusked elephant, and broke the strength of the gods, and they fly like thunderbolts. Yet Ilakkuvaṉ cuts down all eighteen with only four arrows of his own.