கம்பராமாயணம் 7552 · யுத்த 15.239
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அறுத்த காலையின் - இலக்குவன் தன் அம்புகளை அறுத்த பொழுது; அரக்கனும் - கும்பகருணனும்; அமரரை நெடுநாள் ஒறுத்தது - தேவர்களை நெடுநாள் அடக்கித் தண்டித்ததும்; ஆயிரம் உருவது - ஆயிரம் உருவத்தை உடையதும்; திசைமுகன் உதவப் பொறுத்தது - நான்முகன் உதவப் பெற்று வைத்துக் கொண்டிருப்பதுமான; ஆங்கு ஒரு புகர் முகக் கடுங்கணை - அப்போது ஒளிவிடும் முகத்தை உடைய அம்பில்; புத்தேள் இறுத்து - தெய்வத்தைத் தங்கச் செய்து; இது வல்லையேல் மாற்று என்று - இதனை வலிமை உடையையாயின் மாற்றுவாய் என்று; கோத்து எய்தான் - அம்பில் கோத்து எய்தான்.
இவ்விரு பாடலும் அந்தாதித் தொடை புத்தேள் இறுத்து- மந்திரம் கூறி அம்பில் தெய்வத்தை நிறுத்துதல். பொறுத்தல்- தாங்கப் பெற்றது. புத்தேள்-தெய்வம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When they were cut down, the demon took an arrow that had long tormented the gods,
- an arrow of a thousand forms, given him by the four-faced god and kept by him;
- on that fierce, bright-tipped shaft he invoked its deity,
- and saying, “Ward this off if you can!” he fitted it and shot.
What the poem says
When his eighteen arrows are cut down, Kumpakaruṇaṉ brings out a special weapon. It is an arrow given to him by Piramaṉ, the four-faced creator. It can take a thousand forms and has long tormented the gods. He calls its presiding deity into the arrow with a mantra, challenges Ilakkuvaṉ to stop it if he can, and shoots.
This verse and the one before are linked by antāti: the last words of one become the first words of the next.