கம்பராமாயணம் 7554 · யுத்த 15.241
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெங்கடுங்கணை - கொடிய வேகமான அம்புகள்; ஆறு இரண்டு - பன்னிரண்டினை; அனுமன் மேல் அழுத்தி - அனுமன் மேல் பதியுமாறு செலுத்தி; ஏறு வெஞ்சரம் இரண்டு - பாய்கிற கொடிய அம்புகள் இரண்டினை; இளங்குமரன் மேல் ஏற்றி - இலக்குவன் மீது செலுத்தி; ஒரு தொடை நூறும் ஐம்பதும் தொடுத்து - ஒரு தொடுப்பினில் நூறும் ஐம்பதுமாக அம்புகளைத் தொடுத்து; கொடியோன் - கொடிய கும்பகருணன்; ஒரு நொடியில் - ஒரு நொடிப் பொழுதில்; கூறுதிக்கையும் - கூறாகப்பட்டுள்ள திசைகளையும்; விசும்பையும் மறைத்தனன் - ஆகாயத்தையும் மறைத்தான்.
நூறும் ஐம்பதுமாகக் கணை செலுத்தி திக்கையும் விசும்பையும் மறைத்தனன் கும்பகருணன் என்க. ஏறு - பாய்கிற.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Pressing twelve fierce, swift arrows into Aṉumaṉ,
- and loosing two leaping cruel shafts upon the young prince,
- he set a hundred and fifty arrows to a single draw, and in one instant
- the cruel one veiled all the parted quarters and the sky.
What the poem says
Kumpakaruṇaṉ, still fighting from his chariot, turns on Ilakkuvaṉ, who rides on Aṉumaṉ's shoulders. He drives twelve arrows into Aṉumaṉ and two into Ilakkuvaṉ, then looses a hundred and fifty at one draw, so many that they hide the directions and the sky.