கம்பராமாயணம் 7555 · யுத்த 15.242

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மறைத்த வாளிகள் எவற்றையும்அவற்றினான் மாற்றி,
துறைத் தலந்தொறும் தலந்தொறும்நின்று தேர் சுமக்கும்
பொறைக்கு அமைந்த வெங்கரி, பரி,ஆளி, மாப் பூதம்,
திறத்திறம்படத் துணித்து, அவன்தேரையும் சிதைத்தான்.

பொருள் · Meaning in Tamil

மறைத்த வாளிகள் எவற்றையும் - இலக்குவன் திசை மற்றும் விசும்பு ஆகியவற்றை மறைத்த அம்புகள் எல்லாவற்றையும்; அவற்றினால் மாற்றி - அவ்வவற்றை அழிக்கும் திறனுள்ள அம்புகளால் போக்கி; துறைத்தலந் தொறும் தலந்தொறும் நின்று - பூட்டுவதற்கு உரிய இடங்கள் தோறும் இடங்கள் தோறும் நின்று; தேர் சுமக்கும் பொறைக்கு அமைந்த - தேரைச் சுமக்கிற சுமத்தல் தொழிலுக்கு உரிய; வெங்கரி - கொடிய யானை; பரி - குதிரை; யாளி - யாளி; மாப்பூதம் - பெரிய பூதம்; திறத்திறம் படத் துணிந்து - ஆகியவற்றை திரள் திரளாக அழித்து; அவன் தேரையும் சிதைத்தான் - அக்கும்பகருணனது தேரையும் அழித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Countering every arrow that had veiled the sky with arrows of his own,
  2. he cut to pieces, heap upon heap, the fierce elephants, horses, yāḷis and great goblins
  3. that stood at every yoking-place, place after place,
  4. fitted to bear the burden of the chariot, and he shattered his chariot too.

What the poem says

Ilakkuvaṉ answers the arrow-storm by destroying each shaft with a matching arrow. He then cuts down the many beasts harnessed to Kumpakaruṇaṉ's huge chariot, elephants, horses, the lion-like yāḷi and giant goblins, and wrecks the chariot itself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟaitta vāḷikaḷ evaṟṟaiyum avaṟṟiṉāl māṟṟi,
tuṟait talamtoṟum talamtoṟum niṉṟu tēr cumakkum
poṟaikku amainta veṅ kari, pari, yāḷi, māp pūtam,
tiṟat tiṟam paṭat tuṇittu, avaṉ tēraiyum citaittāṉ.