கம்பராமாயணம் 7558 · யுத்த 15.245

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஊன்று தேரொடு சிலை இலன்,கடல் கிளர்ந் தொப்பான்,
‘ஏன்று, மற்று இவன் இன் உயிர்குடிப்பல் ‘என்று, உலகம்
மூன்றும் வென்றமைக்கு இடுகுறிஎன்ன முச் சிகைத்தாய்த்
தோன்றும் வெஞ்சுடர்ச் சூலவெங்கூற்றினைத் தொட்டான்.

பொருள் · Meaning in Tamil

ஊன்று தேரொடு சிலை இலன் - ஏறிய தேரையும் வில்லையும் இழந்தவனான கும்பகருணன்; கடல் கிளர்ந்து ஒப்பான் - கடல் பொங்கினாற்போலச் சினந்து; அவன் இன்னுயிர் குடிப்பென் என்று மற்று என்று - அந்த இலக்குவன் உடைய இனிய உயிரைக் குடிப்பேன் எதிர்த்து நின்று என்று எண்ணி; உலகம் மூன்றும் வென்றமைக்கு - மூன்று உலகங்களையும் வென்றதற்கு; இடுகுறி என்ன - இட்ட அடையாளம் என்னுமாறு அமைந்த; முச்சிகைத்தாய்த் தோன்றும் - மூன்று கிளையை உடையதாய்த் தோன்றும்; வெஞ்சுடர்ச் சூல வெங்கூற்றினைத் தொட்டான் - கொடிய ஒளியுடைய சூலப் படையாகிய கொடிய கூற்றுவனைக் கையில் கொண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Without the chariot he rode and without his bow, he who was like the sea surging up
  2. thought, 'Standing against him, I will drink this one's sweet life,' and
  3. he took up the cruel death that was his trident, burning with fierce light,
  4. three-pronged, as if it were the mark set for his conquest of the three worlds.

What the poem says

Stripped of chariot and bow, Kumpakaruṇaṉ swells with rage like a rising sea and seizes his trident. The poet treats its three prongs as an emblem of his victories over the three worlds, and calls the weapon Death itself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūṉṟu tēroṭu cilai ilaṉ, kaṭal kiḷarntu oppāṉ,
‘ēṉṟu, maṟṟu ivaṉ iṉ uyir kuṭippeṉ ‘eṉṟu, ulakam
mūṉṟum veṉṟamaikku iṭu kuṟi eṉṉa muc cikaittāyt
tōṉṟum veñ cuṭarc cūla veṅ kūṟṟiṉait toṭṭāṉ.