கம்பராமாயணம் 7560 · யுத்த 15.247
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உற்ற காலையின் - இலக்குவன் கும்பகருணனுடன் தரையில் போரிடப் பொருந்திய பொழுது; இராவணன் தம்பி மாடு உதவ - இராவணன், தன் தம்பி பக்கம் உதவுவதற்காக; இற்றதானையின் இருமடி - அழிந்த சேனையினும் இருமடங்கு; இகல்படை ஏவ - போரிடும் படையை ஏவ; அன்னது - அந்தப் படை; முழங்கு முந்நீர் என முடுகி - ஒலிக்கின்ற கடல் போல் ஒலித்து; சுமித்திரை சிங்கத்தைத் தொடர்ந்து - சுமித்திரை பெற்ற சிங்கம் போன்ற இலக்குவனைத் தொடர்ந்து சென்று; முற்றி சுற்றி ஆர்த்தது - முற்றுகை இட்டுச் சுற்றி பேரொலி செய்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When they met so, Irāvaṇaṉ, to aid his brother,
- sent a hostile host twice as large as the army that had perished;
- it closed in like the roaring sea, rushed on
- and, surrounding him, roared as it pursued that lion of Cumittirai.
What the poem says
As Ilakkuvaṉ and Kumpakaruṇaṉ face each other on foot, Irāvaṇaṉ sends a fresh army, twice the size of the one already destroyed, to help his brother. It surges round Ilakkuvaṉ, the lion-like son of Cumittirai, like a roaring sea.