கம்பராமாயணம் 7562 · யுத்த 15.249
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முருக்கின் நாள் மலர் - முள் முருங்கையின் அன்று விரியும் தன்மை கொண்ட மலர்; முகை விரிந்தாலன - மொட்டு விரிந்தாற் போன்று; முரண் கண் அரக்கர் - மாறுபாடு கொண்ட கண்களை உடைய அரக்கரது; செம்மயிர்க் கருந்தலை - சிவந்த மயிரைக் கொண்ட கருந்தலையால் கட்டப்பட்ட; அடுக்கலின் அணைகள் - மலைகள் ஆகிய அணைகள் மூலமாக; பெருக்கினான் - வெள்ளப் பெருக்கினால்; எருவை - செம்பினைப்; பெருங் கனலிடைப் பெய்து பெய்து - மிகுதியான நெருப்பு இடையே பெய்து; உருக்கினால் அன்ன - உருக்கியது போன்ற; குருதி நீர் ஆறுகள் ஓட - இரத்த நீராலாகிய ஆறுகள் ஓட.
அரக்கர் தலையால் கட்டப்பட்ட அணைகள் மூலமாகச் செம்பை உருக்கினால் போன்ற குருதி நீரால் ஆகிய ஆறுகள் ஓட, தொடர் அடுத்த பாடலில் முடியும், முருக்கு-பலாசு. எருவை-செம்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the black, red-haired heads of the demons, whose hostile eyes
- were like the opening buds of the fresh flowers of the murukku tree, as with mountains, he built dams;
- and rivers of blood flowed, like copper melted
- by pouring it again and again into a great fire.
What the poem says
Ilakkuvaṉ's slaughter is drawn as a landscape. The demons' eyes are red like opening murukku (palash) buds, their severed heads pile up like hills that dam the streams, and the blood runs in rivers like molten copper. The sentence continues into the next verse.